தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
தமிழக குடும்பங்களை நாசமாக்குற இந்த 'டாஸ்மாக்' வியாபாரத்தை உங்க அரசு எப்போதான்யா கை கழுவும்?
ஒரு விபத்தால சீரா இயங்கிட்டு இருந்த எங்க வாழ்க்கை திசை மாறி தினமும் நரக வேதனையை அனுபவிச்சுட்டு இருக்குறோம்! சம்பவம் நடந்தது 2019 ஜூலை 10ம் தேதி. பள்ளியில இருந்து மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த என் 8 வயசு மகள் மேல, மல்லிப்பட்டினம் - இரண்டாம் புலிக்காடு சாலையில மது போதையில பைக் ஓட்டிட்டு வந்தவன் மோதிட்டான்.
மண்டை ஓடு எலும்பு மூளையில குத்தினதால, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில இரண்டு அறுவை சிகிச்சை; 5 லட்சம் ரூபாய்க்கு மேல செலவு! சம்பவம் நடந்த இடத்துல இருந்து 500 மீட்டர் துாரத்துல 'டாஸ்மாக்' கடை. இப்பவும் அங்கே வியாபாரம் அமோகமா நடந்துட்டுதான் இருக்கு!
கடந்த ஆண்டு பிப்ரவரியில என் கணவர் மாரடைப்புல இறந்துட்டார். வீட்டு வேலை செஞ்சு என் மூணு பிள்ளைகளையும் காப்பாத்திட்டு வர்றேன். 'கஜா' புயல் சூறையாடின குடிசையில வாழ்க்கை. ஆதரவற்ற விதவை உதவித்தொகைக்கு விண்ணப்பிச்சு அலைஞ்சிட்டு இருக்குறேன். பாவத்துக்கு பரிகாரம் பண்ணுவீங்களாய்யா?
- தமிழக 'குடி'மகனால் காயமுற்ற மகளுக்கு சிகிச்சையும், தனக்கு விதவை உதவித்தொகையும் வேண்டும் சரபுன்சா பேகம், மல்லிப்பட்டினம், தஞ்சாவூர்.