புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி மெட்ரோபாலிடன் எடிஷன் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
இதன் 3.0 லிட்டர் பி 360 பெட்ரோல் இன்ஜின், 355 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கி.மீ., வேகத்தை 6.5 வினாடியில் எட்டும். மற்றொரு 3.0 லிட்டர் டி 300 டீசல் இன்ஜின், 296 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 0 - 100 கி.மீ., வேகத்தை 6.8 வினாடியில் எட்டும். மணிக்கு 209 கி.மீ., வேகத்தில் செல்லும். இரண்டு இன்ஜினிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், 12.3 இன்ச் இன்டராக்டிவ் டிரைவர் டிஸ்பிளே, 12.3 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 சீட்டர், சிக்னல் பூஸ்டர் உடன் வயர்லெஸ் சார்ஜிங், 4 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹீட், கூலிங் வசதியுடன் இருக்கைகள், வைரஸ், பாக்டீரியாவை தடுக்கும் பிஎம் 2.5 ஏர்பில்டர், முன்புறத்தில் ஸ்லைடிங் சன்ரூப், பின்புறத்தில் பிக்ஸட் பனோரமிக் சன்ரூப், 700 வாட் மெரிடியன் 14 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், ஹகுபா சில்வர் நிற பம்பர், 20 இன்ச் டார்க் கிரே அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிறப்பம்சம்.
விலை: ரூ. 1.26 கோடி (எக்ஸ்ஷோரூம்)