வெற்றி வெகு துாரமில்லை!
எது வெற்றி எது தோல்வி
நிர்ணயம் செய்பவர் யார்...
வாழ்வில் வெற்றியும், தோல்வியும்
சாதாரணமெனில் இங்கு
மெனக்கெடல்கள் அசாதாரணமோ!
நிலவில் இறங்கி சாதனை
செய்யின் வெற்றியெனில்
நாளை செவ்வாய் கிரகம் சென்றே
மக்களை பதியமிட
முயற்சி களமிறங்கு...
வெற்றியும் அருகில் வந்தே
தாலாட்டும்!
உழைப்பின் உச்சியில்
முயன்றால் முடியாததல்ல
என்பதை உலகிற்கு
உணர்த்தியே... உன்னையே
நீ உயர்த்திட உள்ளுக்குள்ளே
உயர்வுகளுக்கு வித்திடு!
அவை நாளைய உலகின்
வீரிய மகிழ்வின் விரிந்திடும்
ஆல மரமாய்...
அங்கே - அப்போது
வெற்றியும் அருகில் வந்தே
தாலாட்டும்!
வா... உலகுக்கு எடுத்துச்
சொல்வோம் - உழைத்தவர்
தோற்றதில்லை என்றே
வெற்றியின் முகவரியை
உலகிற்கு எடுத்து விரிப்போம்
வான வீதியிலே!
ரஜகை நிலவன்,
மும்பை.