சுற்றுலாவின் போது, பயணச்சீட்டை ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள்.
நாம் கொண்டு செல்லும் பெட்டிகளுக்கு அடையாளமாக ஏதாவது, 'ஸ்டிக்கர்' ஒட்டலாம் அல்லது கைப்பிடியில் கலர் ரிப்பன் கட்டி வைக்கலாம்;
தொலைந்து போகாது.
வெளியூருக்கு இரவு பஸ்சில் பயணம் செல்லும்போது, காலணிகளை தனியாக ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டால், இறங்கும்போது தேடும் வேலை இருக்காது.
சுற்றுலாவின் போது, பெண்கள், கையில் ஒரு முழுக்கை ஷர்ட் எடுத்துச் செல்வது நல்லது. இரவில் துாங்கும்போது ஷர்ட்டை போட்டுக் கொண்டால், புடவை விலகினாலும் தெரியாது; இதனால், நகைகளுக்கும் பாதுகாப்பு!
தேவையான பணத்தை கையிலும், பையிலும் பிரித்து வைத்துக் கொள்ளவும். கடன் அட்டை மற்றும் ஏ.டி.எம், அட்டையும் எடுத்துச் செல்லலாம். பயணம் செய்யும் குடும்பத்தார் எல்லாருக்கும் அடையாள அட்டை மிக அவசியம்.