தேவையானவை: மாம்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், பொடித்த சர்க்கரை - 2 தேக்கரண்டி, ஏலக்காய் துாள் - கால் தேக்கரண்டி, துருவிய பாதாம் - ஒரு தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழத்தை தோல் சீவி, கொட்டை நீக்கி, மிக்சியில் அடித்துக் கொள்ளவும். தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, நீரை வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் மாம்பழ விழுது, கெட்டியாக உள்ள தயிர், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்த்து கலக்கி, சிறிய கிண்ணங்களில் ஊற்றவும். மேலே பாதாம் துருவல், மாம்பழத் துண்டுகள் துாவி அலங்கரிக்கவும். குளிர வைத்து சாப்பிடலாம்.