புதுப்பொலிவுடன் மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் ஹேட்ச் பேக் கார் விரைவில் அறிமுகமாக உள்ளது. மும்பை, புனேயில் சோதனை ஓட்டம் நடக்கிறது.
எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், டூயல் எக்சாஸ்ட், 5 சீட்டர் கேபின், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் இண்டிகேட்டர், எல்இடி டெயில்லேம்ப், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் 'ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ' இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பூட் பகுதியில் 'ஸ்போர்ட் பேட்ஜ்' சிறப்பம்சம்.
சர்வதேச அளவில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (129 பிஎச்பி பவர், 235 என் எம் டார்க் திறன்) பயன்படுத்தப்படுகிறது. 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் செல்லும். 0-100 கி.மீ., வேகத்தை 9.1 வினாடிகளில் எட்டும்.
இந்தியாவில் 1.0 லிட்டர் கே10 சி டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின்(101 பிஎச்பி பவர், 150 என்எம் டார்க் திறன்) பயன்படுத்தப்படலாம். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.12-13 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)