இறைவன் படையலை சாப்பிடுவாரா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2022
08:00

'குருவே... படைக்கும் நைவேத்யத்தை, இறைவன் சாப்பிடுகிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால், பிறருக்கு பிரசாதமாக வழங்க முடியுமா?' என்று கேட்டான், சீடன் ஒருவன்.
எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்து, 'நம் வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்...' என்றார், குரு.
அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருந்து தோன்றியது
என பொருள் கொண்ட, 'பூர்ணமிதம்' எனும் ஈஷாவாஸ்ய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார், குரு.
அனைத்து மாணவர்களும், மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.
சிறிது நேரத்திற்கு பின், கேள்வி கேட்ட, சிஷ்யனை சைகையால் அழைத்த குரு,'எனதருமை சீடனே... மந்திரத்தை மனதில் ஏற்றிக் கொண்டாயா?' என்றார்.
'முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன் குருவே...' என்றான்.
'எங்கே ஒருமுறை சொல் பார்ப்போம்...' என்றார், குரு.
கண்களை மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி, கணீர் குரலில் கூறத் துவங்கினான்.
'பூர்ண மித பூர்ண மிதம்...' என, கூறி முடித்தான்.
'நீ, சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே... எங்கே உன் புத்தகத்தை காட்டு...' என்றார், குரு.
பதட்டம் அடைந்து புத்தகத்தை காண்பித்தவன், 'குருவே... தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால், இதில் இருப்பதை போலவே நான் கூறினேன்...' என்றான், சீடன்.
'இந்த புத்தகத்திலிருந்து படித்து தான் மனதில் உள் வாங்கினாயா... இதிலிருந்து உள் வாங்கினாய் என்றால், மந்திரம் இதில் இருக்கிறதே.... உன் மூளையில் மந்திரத்தை ஏற்றிக் கொண்டால், புத்தகத்தில் இருக்கக் கூடாதல்லவா...' என்றார், குரு.
குழப்பமாக பார்த்தான், சீடன்.
குரு தொடர்ந்தார்...
'உன் நினைவில் நின்ற மந்திரம், சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்துால வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது, ஸ்துால வடிவில் இருந்தாலும், அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.
'நீ உள்வாங்கிய பின், புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்து விட்டதா, இல்லையே... அதுபோல தான், இறைவன் உட்கொண்ட பிரசாதம், அளவில் குறையாமல் இருக்க, நாம் எல்லாரும் உண்கிறோம். ஸ்துாலமாக இருக்கும் நாம், சூட்சுமமாக இருக்கும் இறைவனுக்கு படைத்த நைவேத்யத்தை உட்கொள்கிறோம்...' என்று விளக்கினார், குரு.
ஆன்மிக வாழ்வுக்கு, பாரம்பரிய பூஜை முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த, கூறப்பட்ட கதை இது.

ஆ. சி. கோவிந்தராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
13-மே-202212:23:53 IST Report Abuse
Srinivasan Indumathi இது கடவுளுக்கு சமர்ப்பித்தது என்ற மனதுக்கு தெரியும் பொழுது சந்தேகமில்லாமல் தைரியமாக சாப்பிடலாம் அவன் அந்த பிர சாதத்தில் ஏதாவது இருந்தால் அதை நீக்கி நமக்கு நல்லதொரு பண்டமாக தருவான். அவன் கை வைத்தால் குறையுமா என்ன ?
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
10-மே-202221:10:15 IST Report Abuse
Manian குருவே, எல்லாம் மாயை என்று ஆதி குரு சங்கரர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லையே என்றான் சிஷ்யன். அது கிடக்கட்டும் உபன்யாசத்திற்கு நாழி ஆகி விட்டது. வா போகலாம் என்றார் குரு. மண்டபத்தில் சிஷ்யனின் தாத்தா- பாட்டி, தந்தை-தாய், சகோதர-சகோதரரிகள், நண்பர்கள், குரு அமர்ந்திருந்தார்கள். சிஷ்யன் ஒவ்வொருவருக்கும் தன் நமஸ்காரத்தை சொல்லி வந்தான். குருவிற்கும் வந்தனம் செய்தான். குரு சிஷ்யனிடம், நீ எல்லொருக்கும் ஒரே சொந்த முறை, வார்த்தை முறை, தொனியில் வந்தனம் சொன்னாயா என்று கேட்டார். இல்லை குருவே. தாத்தா-பாட்டி-இடம் ஒரு பேரனாக, அப்பா-அம்மாவிடம் ஒரு மகனாக,...., கடைசியில் உங்கள் சிஷ்யன் என்று பய-பக்தியோடு குரு-சிஷ்யனாக வந்தனம் சொன்னேன் என்றான். சிஷ்யா, ஆக ஒவ்வொருவர் முன்பும் அவர்களிடம் உள்ள உன் வார்த்தைகளை பேசும் முறை மாற்றி, உன் சொந்த முறை உணர்வு முறைப் படி வெளிப்படுத்தி பேசினாய். இதில் எது உனது உண்மையான நிஜ உருவம் என்றார்? சிஷ்யன் தலை குனிந்து நின்றான். சிஷ்யா, இதுதான் மாயை."நான்" என்பது ஒரு சொல் ,அது "நீ"யாகாது. அது தற்காலிகமானது. அது உன் சூஷ்ம ஆத்மாவை -இறைவன் உன்னுள் இருப்பதை "நான்" என்பது காட்டாது, வெளிப்படை உலக சொந்தங்கள் முன் நாடகமாடும் ஒரு பாத்திரத்தையே குறிக்கும். ஆனால் உள் உணர்வோடு இறைவனிடம் ஒன்றபடும்போது அதில் எந்த நடிப்பும் இல்லை. அதுவே உண்மை, அது மாஐ இல்லை எந்த முறையில் நீ இறைவனை பணிந்தாலும் -குழந்தையாக, குரு, தாய், தந்தையாக..,அது அந்த பரமாத்மாவுடனே சேர்த்து வைக்கும். சங்கரர் இந்த புரிதல் இல்லாத நிலையையே மாயை என்றார். இந்து மதத்தில் மட்டுமே , நீ பரம்பொருளை எந்த உலக சொந்த முறையிலும் மாயை காரணமாக வழி பட்டாலும், அது ஆண்டவன் - உன் உள் இருக்கும் பரமாத்மாவையே சென்றடையும். அதுவே மாயை இல்லாத உறவு என்றார். ஒவ்வொரு ஜீவனும் பரமாத்மாவின் நிழலே, அதுவே உண்மை. நிழலும் அசலும் ஒன்றாக இணைவதே பேரின்பம் என்றார். ராமானுஜரும், ஆத்மா-பரமாத்மாவை ஒரு நாணயத்தின் இரு பக்கமாக -தலையைப் பார்க்கும் போது, நாணயத்தின் பூ மறுபக்கம் மறைந்திருப்பதை கண்ணால் காண முடியாதைப் போல்- உணர வேண்டும் என்கிறார். "நான் அகங்காரம்" என்பது" புரிதல் இல்லாத சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் சூழ் நிலைக்கு தகுந்த நடிகரே -மாறும் மாயை - கானல் நீர் போன்றது. சிஷ்யன் பணிந்து நின்றான். அதுவே 'பூர்ண மித பூர்ண மிதம்...' என, கூறி முடித்தார் குரு.
Rate this:
Cancel
R.Ganesan - Chennai,இந்தியா
10-மே-202215:02:14 IST Report Abuse
R.Ganesan அருமையான இத்தகைய தகவல்களை திரட்டி, தினமலர் புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்னைப் போன்றோர் நன்றியுடையவர்களாக இருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X