* ஜெஸிநெக் என்ற டீலர், தன் மகளின் 'மெர்சிடிஸ்' என்ற பெயரை காருக்கு வைக்கச் சொன்னதால் தான், 'டெய்ம்லர் பென்ஸ்' என்பது, 'மெர்சிடிஸ் பென்ஸ்' என மாற்றம் அடைந்தது.
*'சாம்சங்' என்ற பெயருக்கு கொரிய மொழியில், 'மூன்று நட்சத்திரங்கள்' என்று பொருள்.
*'மிட்சுபிஷி' என்ற பெயருக்கு, 'மூன்று வைரங்கள்' என்று பொருள்.
*ஒலி என்று பொருள்படும், சோனிக் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்ட பெயர் தான்: 'சோனி!'
*'பிர்மிங்ஹாம் ஸ்மால் ஆம்ஸ்' என்பதன் சுருக்கம்: பி.எஸ்.ஏ., சைக்கிள்.
*'இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ்' என்பதன் சுருக்கம்: ஐ.பி.எம்., கம்ப்யூட்டர்
*'இண்டஸ்ட்ரியல் கிரடிட் இன்வெஸ்ட்மென்ட் கார்பரேஷன் ஆப் இந்தியா' என்பதன் சுருக்கம்: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி.
*'சன் ஆப் எலக்ட்ரானிக் பிரின்டர்' என்பதன் சுருக்கம்: எப்சன் கம்ப்யூட்டர் பிரின்டர்.
*போட்டோ காப்பியர்க்கு, முதல் முதலாக அதைத் தயாரித்த நிறுவனப் பெயரிலிருந்து, 'ஜெராக்ஸ்' என வைக்கப் பட்டது.
*ஜார்ஜ் ஹாரிஸ் தன் தயாரிப்புக்கு, 18ம் நுாற்றாண்டு இலக்கியக் கழகம் ஒன்றின் நினைவாக சூட்டிய பெயர்: கிட் கேட் சாக்லெட்.