'வாரம் 268ஐ கடந்திருக்கும் தினமலர் - கண்ணம்மா என்ன சாதித்திருக்கிறாள்' எனும் கேள்விக்கான பதில்... இந்நன்றி!
'என் செய்தி வெளியான மறுநாள் காலையில சித்தாத்துார் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் நேர்ல வந்து என் மகனை அழைச்சுட்டுப் போனார். 'திரு. பிரதாப்பிற்கு ஏப்ரல் 2022 முதல் மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது'ன்னு விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கையொப்பமிட்ட ஆணை, ஆட்சியர் கையால கிடைச்சது. 'ஓய்வூதியம் அடுத்த மாதத்துல இருந்து வரவாயிடும்; ஸ்கூட்டரும் ஒரு மாதத்துல கிடைச்சிடும்'னு அதிகாரிகள் நம்பிக்கை கொடுத்திருக்காங்க; தமிழக முதல்வருக்கு நன்றி!
'மூணு வருஷமா போராடுறேன்யா; 'கண்ணம்மா' மூலமா 24 மணி நேரத்துல என் குறை தீர்ந்திருச்சு. மக்களோட குரலா ஒலிக்கிற 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்நாள் முழுக்க நானும் என் மகனும் கடமைப்பட்டிருக்கோம்!'
-- மின்வாரிய அலட்சியத்தால் கால்களை இழந்த மகனுக்காக 01.05.2022 'ரவுத்திர வீணை' பகுதியில் நீதி கேட்டிருந்த வெ.ரேவதி, கண்டமானடி, விழுப்புரம்.