ரவுத்திர வீணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2022
08:00

புதுச்சேரி கவர்னர் தமிழிசைக்கு...

வணக்கம். 'என்னிடம் உதவி கேட்டு வரும் பெண்களுக்காக என் அலுவலக கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும்'னு மகளிர் தின விழாவுல நீங்க பேசினதை செய்திகள்ல படிச்சேன்.

என் கோரிக்கை இதுதான்...
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 'பாரத ரத்னா' ராஜிவ்காந்தி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் வாங்குறதுக்காக 15.11.2019ல விண்ணப்பிச்சேன். விண்ணப்பத்தோட ஆவணங்கள் சேர்த்து, 'வேறு எந்த அரசு திட்டத்தின் கீழும் வீடு கட்ட மானியம் பெறவில்லை'ங்கிற உறுதிமொழி சான்றும் இணைச்சிருந்தேன்.

விண்ணப்ப எண்: 154281 குறிப்பிட்டு, 'ஆவணங்களோடு விண்ணப்பம் பெறப்பட்டது'ன்னு ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒப்புகைப் படிவம் கிடைச்சது. திருபுவனை நல ஆய்வாளர் ஆவணங்களை ஆய்வு செஞ்சு விடுபட்ட ஆவணத்தை சுட்டிக் காட்டினார். அதை இணைக்க ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்துக்குப் போனா, 'உங்க விண்ணப்பம் காணாம போயிருச்சு'ன்னு அலட்சியமா சொல்றாங்க!

அரசு தரப்புக்கு பல புகார் மனுக்கள் அனுப்பி எந்த பலனும் இல்லை. மார்ச் ௭ம் தேதி உங்களுக்கு மனு அனுப்பிட்டு நம்பிக்கையோட காத்திருக்கிறேன். நீங்களாவது எனக்கு உதவுவீங்களா?
- ஆதிதிராவிடர் நலத்துறை அலட்சியத்தால் வீடு கட்ட அரசு மானியம் கிடைக்காமல் அவதியுறும் இ.சாருமதி, திருபுவனை, புதுச்சேரி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
09-மே-202206:54:15 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அரசியல்வாதிகளின் அறிவிப்புகள் ........... இதைத் தண்ணியிலதாம்மா எழுதணும் ........
Rate this:
Siva - Chennai,இந்தியா
09-மே-202212:34:38 IST Report Abuse
Sivaஇவருக்கு சீக்கிரம் வீடு கிடைக்கட்டும். ஒரு விஷயம் , 2019ல் அங்கு நாராயணசாமி ஆட்சி. ஊழல், நிர்வாக சீர்கேடு என்று நிரம்பியிருந்த ஆட்சி. அப்போது இவ்வாறு நடைபெற்றதில் ஆச்சரியம் இல்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X