மனதை மயக்கும் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி கார் விற்பனை ஜோராக உள்ளது. 2021, ஏப்ரலில் 8,644 எர்டிகா கார்கள் விற்பனையாகின. இது 2022, ஏப்ரலில் 14,889 ஆக அதிகரிக்க, 72 சதவீத வளர்ச்சியை எட்டியது. இதற்கு புதிய தலைமுறை எர்டிகா மாடலின் வரவே முக்கிய காரணம்.
எல்இடி ஹெட்லேம்ப், சுஸுகி கனெக்ட் உடன் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், 12 வோல்ட் சார்ஜிங் போர்ட், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், பேடில் ஷிப்டர்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், 4 ஏர்பேக்குகள், குரூஸ் கன்ட்ரோல், 7 சீட்டர், மூன்று வரிசை இருக்கைக்கும் ஏசி' வென்ட் சிறப்பம்சம்.
இதன் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் கே15சி நான்கு சிலிண்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின், 103 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்/ 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். சிஎன்ஜி(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மாடலும் உண்டு. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.51 கி.மீ., மற்றும் சிஎன்ஜி மாடல் கிலோவிற்கு 26.11 கி.மீ., மைலேஜ் கொடுக்கும்.
விலை: ரூ. 8.35-12.79 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)