பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை. நிறத்துக்கு ஏற்ப சத்துக்கள் இருக்கின்றன. கண்ணைக் கவருபவை சிவப்பு நிறப் பழங்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.
ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். இவற்றில், 'வைட்டமின் - ஏ' சத்து அதிகம்.
இவை...
* ரத்தத்தை விருத்தியடைய செய்யும்
* சிவப்பணுக்களை அதிகரிக்கும்
* ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பை கரைக்கும்
* சிறுநீரகக் கோளாறை நீக்கும்
* தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையாக்கும்
* நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளையை பலம் பெறச் செய்யும்
* மன அழுத்தத்தைப் போக்கும்
* நினைவாற்றலைத் துாண்டும்
* பார்வையை தெளிவடைய செய்யும்
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
* எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்தும்
* இதயத்திற்கு சிறந்த டானிக்காக விளங்கும்.
மஞ்சள் நிறப் பழங்களில் எலுமிச்சை, பப்பாளி, வாழை, அன்னாசி போன்றவை அடங்கும்.
இவற்றில், கால்ஷியம், வைட்டமின் - சி, வைட்டமின் - ஏ, போலிக் அமிலம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மஞ்சள் நிறப் பழங்களை எல்லாரும் சாப்பிடலாம்.
இந்த வண்ண பழங்கள்...
* நரம்புத் தளர்ச்சியை போக்கும்
* ஜீரண சக்தியைக் கூட்டும்
* மலச்சிக்கலை நீக்கும்
* குடல் புண்ணை ஆற்றும்
* நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்
* பார்வையை தெளிவு படுத்தும்.