தேவையானப் பொருட்கள்:
நார்த்தை இலை - 1 கப்
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காய பொடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், சீரகம், பெருங்காயப் பொடியை வறுக்கவும். பின், பொடியாக நறுக்கிய நார்த்த இலைகளை, அதில் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும், உப்பு சேர்த்து பொடிக்கவும்.
சுவை மிக்க, 'நார்த்தை இலைப் பொடி!' தயார். இதை சாதத்தில் போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, பிசைந்து சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தியை தரும்!
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.