ஞானி என்பவர் யார்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2022
08:00

எவர் அழைத்தும் போகாமல், விதுரனின் வீட்டுக்கு சென்றார், ஸ்ரீகிருஷ்ணர்.
'நம் வீட்டுக்காவது, கிருஷ்ண பரமாத்மா வருவதாவது...' என நினைத்திருந்த, விதுரன், அவரின் வருகையை கண்டு நிலை தடுமாறினான்; இங்குமங்குமாக அலைந்து, என்ன செய்வதென்று பரபரத்து, ஏதேனும் சாப்பிட கொடுக்க வேண்டுமென்று நினைத்தபடியே அடுப்படிக்கு ஓடினான்.
வாழை பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்து வந்து, 'கிருஷ்ணா... இப்போது, என்னிடம் இருப்பது இவை மட்டுமே... மறுக்காமல் சாப்பிட்டு, உன் பசியை ஆற்றிக் கொள்...' என்று கெஞ்சினான்.

'உன் அன்பே, என் பசியை ஆற்றி விட்டது, விதுரா...' என்றார், கிருஷ்ணர்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரம், 'ச்சே... வீட்டுக்கு வந்த கிருஷ்ணனை, இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது...' என்று, தன்னை தானே நொந்து கொண்டவன், ஓடிப்போய் ஒரு ஆசனத்தை எடுத்து வந்து, அமரச் சொன்னான். முன்னதாக, அந்த ஆசனத்தை தடவி தடவி பார்த்துக் கொண்டே இருந்தான், விதுரன்.
'துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம், அவனை போலவே சிந்தனை கொண்டு, சுயநினைவின்றி, பகவான் கிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ... அந்த ஆசனத்தில் ஊசியை செருகி வைத்து, இம்சிக்க செய்திருக்கிறோமோ... துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு, அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ...' என பதைபதைத்தான், விதுரன்.
'விதுரா... கவலை எதற்கு, என் பசியை ஆற்றி விட்டாய், நீ. நான் வந்ததும், என்ன செய்வது, என்ன தருவது என்று தெரியாமல் கலங்கி தவித்தாயே... அந்த உன் கலக்கமே, என் பசியை போக்கி விட்டது. அதனால் தான், நீ பழம் தந்தும், வேண்டாம் பசியாறி விட்டதாக சொன்னேன்...' என்றார், கிருஷ்ணர்.
எவ்வளவு பெரிய ஞானி, விதுரன். ஆனால், அந்த ஞானியின் கலக்கத்தை கண்டு ரசித்தார், கிருஷ்ணர்.
'எவனொருவன், ஒரு விஷயத்தை கண்டு கலங்கி தவிக்கிறானோ, அவனே ஞானி. அப்படி ஞானியாக திகழ்பவரையே மதிக்கிறார்; அருள்கிறார்; அரவணைக்கிறார்; ஆட்கொள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா...' என, அற்புதமாக விளக்குகிறார், வேதவியாசர்.
உலக விஷயங்களில், தெளிவாக இருங்கள்; பகவத் காரியத்தில் கொஞ்சம் கலங்கி, குழம்பியே இருங்கள். குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்; கடவுளின் பேரருளும் கிடைக்கும்.

ஆ. சி. கோவிந்தராஜன்

ஆன்மிக தகவல்கள்!

நீண்ட காலமாக பூஜித்த சாளகிராமம், பாணலிங்கங்களை பூஜிக்க முடியவில்லை என, பிறருக்கு கொடுக்கக் கூடாது

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
21-மே-202202:29:31 IST Report Abuse
Manian தலைவரைப் பார்க்கப் போனார் அரசியல்வாதி அடிமடியார். கையில் உருந்த பூச்செண்டு, மாம்பழக்கூடையை தலவரிடம் நீட்டினார். தலைவர் புன் முறுவல் கூட காட்வில்லை. வந்தவர் தன் முதுஇல் தொங்கிய விலை மதிப்பில்லா புக் பேக்கை கழற்றினார். திறந்தார். 5 அமெரிக்க அக்மார்க் 99.9% சுத்த தங்க கட்டிகளை எடுத்து தலைவர் பாதத்தில் வைத்து, கால் தொட்டு கும்பிட்டார். தலைவர் ஆனந்தத்தோடு, உங்களுக்கு கடலோர காப்பக உப மந்திரி பதவி உத்தரவு இதோ என்றார். ஆகா, விதுரரைப் பற்றி ஏன் தலைவர் படிக்கச் சொன்னார் என்பதை புரிந்து கோண்டார். அன்று கண்ணன் முன் விதுரர் ஞானி, இன்று தன் முன் நிற்கும் தலைவரே தங்கம் பெற்ற ஞானி என்பதை உணர்ந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X