திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் பிரதான கடை வீதியில் பிரத்யேக மரப்பொருட்கள் அங்காடியை நிர்வகித்து வருகிறார் சசிகலா முருகேசன்.
தொட்டில் கம்பு, டீத்தர், மணிகள் கோர்க்கப்பட்ட நடைவண்டி, சாய்ந்தாடும் குதிரை, பம்பரம், பூஜை மண்டபம், கலைநயமிக்க தேர், ஒன்றரை அடி வீணை... எல்லாம் சொந்த பட்டறை தயாரிப்புகள்; உப்புஜாடி, நகை பெட்டி, பென் ஸ்டாண்டு, சதுரங்க பலகை, சப்பாத்தி பலகை எல்லாம் வெளிமாநில வரவுகள்!
கலையின் கதை
தைல மரங்களே எங்களது தயாரிப்பின் மூலம். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மரங்களை ஓர் ஆண்டு வரை நிழலில் பக்குவப்படுத்தி கடைந்து, மரப்பிசினான அரக்கோடு கலந்த வண்ணத்தை தாழம்பூ இலை கொண்டு பூசி பொருட்களை தயாரிக்கிறோம்.
பூம்புகார் அங்கீகரிச்ச கைவினை கலைஞர் தகுதி என் தயாரிப்புகளை தரமாக்கி இருக்கு. சிறப்பு குழந்தைகள் பயன்படுத்துற நடைவண்டி தயாரிக்கிறப்போ மட்டும் எனக்கு தனி சந்தோஷம்!
நிறைய கடைசல் கலைஞர்களை உருவாக்கணும்னு ஆசை; மர விளையாட்டு சாமான்களை மட்டுமே குழந்தைகள் பயன்படுத்தணும்னு பேராசை.
சிறப்பு பொருள்: குழந்தைகளை வசீகரிக்கும் 32 பொருட்கள் அடங்கிய கலைநயமிக்க மரச்சொப்பு சாமான் - ரூ. 150 முதல்
97512 18136