தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
தஞ்சாவூர் தேர் விபத்துல பலியானவங்க குடும்பத்துக்கு நீங்க நேர்ல போய் நிவாரணம் தந்தப்போ என் மனசு கொதிச்சுப் போச்சுய்யா! செப்டம்பர் 7, 2019 அதிகாலை; கழிப்பறை வசதி இல்லாததால மறைவிடம் தேடிப் போன என் கணவர் வீடு திரும்பலை. 'ஜமீன் கொரட்டூர் பேருந்து நிலையம் பக்கத்துல அறுந்து கிடந்த மின்கம்பி தாக்கி இறந்துட்டாரு'ங்கிற தகவல் வந்தது.
வெள்ளவேடு காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு; நேமம் குறுவட்டம் வருவாய் ஆய்வாளர் எங்ககிட்டே வாக்குமூலம் வாங்கினார். 3.5.2020ல பூந்தமல்லி, வட்டாட்சியர் அலுவலகத்துல மனு கொடுத்தப்போ எண்: 330 குறிப்பிட்டு ஒப்புகை அட்டை கொடுத்தாங்க; அவ்வளவுதான்!
'நிவாரணம் வேணும்'னு கேட்டு பலதடவை ஆட்சியர் அலுவலகத்துலேயும் மனு கொடுத்துட்டேன்; பதில் இல்லை. 'விதவை உதவித்தொகை'க்காக மனு நீட்டுனா, விதிமுறைகளை காரணம் காட்டுறாங்க.
வாழ்ற வீட்டுக்கு பட்டா இல்லைய்யா; கணவரோட தினக்கூலி வருமானத்துல குடும்பம் இயங்கிட்டு இருந்தது; இப்போ, மகன் மகளோட எதிர்காலம் ரொம்பவே பயம் காட்டுது. ஓர் ஆண்டு ஆட்சியில பல சாதனைகள் சொல்றீங்க... ஆனா, என் வேதனை தீரலையே!
- அறுந்து கிடந்த மின்கம்பியால் பலியான கணவர் மரணத்திற்கு நிவாரணம் கேட்டுப் போராடும் ச.அற்புதம், ஜமீன் கொரட்டூர், திருவள்ளூர்.