ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2022
08:00

* 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்துல 60 லட்சம் தமிழக மக்களை பரிசோதிச்சதுல 24 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 16.5 லட்சம் பேருக்கு நீரிழிவு, 12 லட்சம் பேருக்கு இவை இரண்டும்னு முடிவு! 60 லட்சத்துல 52.5 லட்சம் பேர் நோயோட வாழ்ற தமிழகத்துல இன்னும் என்ன சாதிக்கணும்னு அரசு 'டாஸ்மாக்' வணிகம் பண்ணுது!

* 'கொரோனா ஊரடங்கும், ஸ்மார்ட்போனுமே மாணவர் மனநிலையில் மாற்றம் வரக்காரணம்' - ஆசிரியர்கள். சரிங்க சார்... ஆசிரியர் போர்வையில மாணவியர்கிட்டே தப்பா நடந்துக்கிற அந்த உத்தமர் மனநிலைக்கும், பாதிக்கப்பட்ட மாணவி கதறுற வரைக்கும் அவனை கண்டுபிடிக்க முடியாத சக ஆசிரியர்கள் மனநிலைக்கும் என்ன காரணம்?

* 'கூடங்குளம் அணுக்கழிவுகளை ஒப்பந்தப்படி ரஷ்யாவிற்கு கொண்டு செல்ல வேண்டும்'னு ஆவேசப்படுற தோழர் திருமாவளவனுக்கு, 'இது சாத்தியமில்லை எனில் மக்கள் வசிக்காத பகுதியில் 'நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு' அமைத்து அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமிக்கலாம்'னு நம்ம முதல்வர் பிரதமருக்கு யோசனை சொன்னது தெரியுமா... தெரியாதா!

* 'ஓர் ஆண்டு முழுக்க சினிமா பார்க்காவிடில் மக்கள் ஒன்றும் நோய் வந்து செத்துப் போய்விட மாட்டார்கள்!' - கமல்ஹாசன். 'ப்ளே ஆப் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறவில்லையெனில் உலகம் அழிந்து விடாது!' - தோனி; சொல்லட்டுமே... அதுக்காக மானமுள்ள தமிழர்களாகிய நாம சினிமா, கிரிக்கெட் போதையை விட்ற முடியுமா!

இருள் கிழிப்போம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
26-மே-202207:33:02 IST Report Abuse
Manian ' ஓர் ஆண்டு முழுக்க..' என்பது உடல் நோயைப் பற்றியதில்லை, "மன நோயை" பற்றியதே.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
26-மே-202207:29:55 IST Report Abuse
Manian ''கொரோனா..' இந்தக் கேள்வியை "ஆசிரியர்கள் ஐவர்" கழுவிடம் கேட்டோம். அவர்கள் பதிலும் யோசிக்கவைக்கிறதே- ஆசிரியர்களுக்கும், சுற்றி நின்றவர்களுக்கும் கொரோனா வியாதி, பயம், தாக்கம் காரணமாக, எதுவுமே நினைவில் இல்லை என்கிறார்களே பணி மூப்பு நீதிபதி கொரானா வெற்றி கொண்டான் அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் "மேயோ கிளினிக்" அரிசோனா, யூஎஸ்ஏ விஞ்ஞானி கிளிசாமியிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார். கொரானா கண்டிப்பாக தண்டிக்கப்படும் கல்வி மந்திரி பொய்யா மொழிப் புலவர்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
18-மே-202205:32:28 IST Report Abuse
Manian மக்களைத் தேடி மருத்துவம்' - பொதுவாக, இந்தியர்கள், ஆப்ரிக்கர்கள், தென் அமெரிக்கர்களுக்கு மரபணு கோளாறால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு வருதாம். அப்ப அவங்களுக்கு பிறகு இலவசங்களுக்கு காசு வேணாமா? குடிப்பது ஜனநாயக உரிமை, டாஸ்மார்க்கா அவுன வூட்டுக்கு போயி அவினுகளை குடிக்க வலுக்கட்டாயமாக கூட்டியாரதா? டாஸ்மார்க் ஏழைகளின் ஜனநாயக சுராபானம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X