வீணாகும் பப்பாளியில் உரம் தயாரிக்கலாம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
வீணாகும் பப்பாளியில் உரம் தயாரிக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2022
08:00

வீணாகும் பப்பாளி பழத்தில், உரம் தயாரிப்பு குறித்து, காஞ்சி புரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் எம்.குணசேகரன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான மாடி தோட்டத்தில், காய்கறி மற்றும் கீரை வகைகளை சாகுபடி செய்கிறேன். இயற்கை உரங்களை தயாரித்து, இலை வழியாகவும், வேர்கள் வழியாகவும் செடிகளுக்கு அளித்து வருகிறேன்.

குறிப்பாக, பப்பாளி பழத்தில் இயற்கை உரம் தயாரித்து வருகிறேன். இது, செடிகளுக்கு நல்ல பூச்சி விரட்டியாகவும், மக்கிய தொழு உரமாகவும் பயன்படுகிறது. உதாரணமாக, ஒரு கிலோ பப்பாளி பழம் என்றால், ஒரு கிலோ வெல்லம் கலந்து, இரண்டையும் பிசைந்து, காற்று புகாத டப்பாவில் அடைக்க வேண்டும்.

கடிகாரம் சுழலும் திசையில் தினசரி கலக்கிவிட வேண்டும். இக்கலவை நொதித்து அமிலம் வெளிப்படும்போது, செடிகளுக்கு தெளிப்பு உரமாக பயன்படுத்தலாம். அதன் திப்பியை, மண்ணில் கலந்து, செடிகளுக்கு தொழு உரமாக பயன்படுத்தலாம்.

இதுவே, வேளாண் மற்றும் காய்கறி விவசாய நிலத்திற்கு உரம் தயாரிக்கும்போது கூடுதல் வெல்லம், பழங்கள் தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:எம்.குணசேகரன் - 96888 36663

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X