பாலுாட்டி வகை உயிரினமான வவ்வால், 5.3 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகில் தோன்றியது.
இதில், 2 ஆயிரம் வகைகள் உள்ளன; இந்தியாவில் மட்டும், நுாற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
அதிநுட்ப மோப்ப சக்தியால், இரை இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியும். கொசு, வண்டு, பூச்சி மற்றும் பழங்களை தின்னும்.
இரை தேடும் போது, இருட்டில் மெல்லிய ஓசை எழுப்பும். அதில், கலவரமடைந்து, கொசு, பூச்சிகள் பறக்கும்.
இந்த ஒலியை துல்லியமாக கணித்து, வேட்டையாடும். இரவில் பறந்து இரை தேடும் வவ்வால், பகலில் இருள் சூழ்ந்த கட்டடம், குகை பகுதியில், தலைகீழாக தொங்கும்.
'வவ்வால் இனம் மட்டும் இல்லையென்றால், சிறு பூச்சி, வண்டு, கொசுக்கள் பெருக்கம், உலகில் கட்டுக்கடங்காமல் போய் விடும்...' என்கின்றனர், அறிவியல் அறிஞர்கள்.
சில இன வவ்வால்கள் மட்டும், பழங்களை தின்று வாழும்.
ரத்தம் உறிஞ்சும், 'வம்பயர்' என்ற இன வவ்வால், அமெரிக்காவில் காணப்படுகிறது. அது, கரப்பான், தேள், பல்லி, சுண்டெலி, சிட்டுக்குருவி மற்றும் விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து வாழும்.
இமயமலைப் பகுதி காட்டில் வாழும் ஒரு வகை வவ்வால் இனம், கடும் குளிர் காலத்தில் இடம் பெயரும். உணவு பற்றாக்குறையே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.