இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
08:00

குளிர்பானத்தில், போதைப் பொருள்!
என் தோழியினுடைய, 12 வயது மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள். ஒரு பிரபலமான பள்ளியில் படிக்கும் அந்த சிறுமிக்கு, படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு, கவிதை, கட்டுரை, ஆடல் - பாடல் என, எல்லாமே அத்துப்படி. இத்தனைக்கும் வகுப்புக்கு, அவள் தான் தலைவி.
திறமையான அந்த குழந்தையின் வாழ்வில், புயல் வீச ஆரம்பித்தது. ஒருநாள், அவளுடைய தோழி ஒருத்தி, 'சாப்ட் ட்ரிங்க்ஸ்' வாங்கி கொடுத்து குடிக்கச் சொல்லியிருக்கிறாள். பிரபலமான கம்பெனியின், பானம் அது. சுவையாக இருந்துள்ளதால், விடுமுறை நாட்களில் கூட, அந்த பானத்தை தன் தந்தையை வாங்கி வரச்செய்து, எல்லாரும் சேர்ந்து அதை பருகுவர்.

'இது, எங்கள் பள்ளிக்கு அருகில் விற்பது போல இல்லை...' என்பாள், அச்சிறுமி.
ஆறு மாத காலத்தில், அந்த பானத்திற்கு அடிமையானவள், சாப்பாடு கூட வேண்டாம், எப்போதும் அதையே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இதனால், படிப்பில் கவனம் குறைந்தது. விளையாட்டு, கதை, கட்டுரை எல்லாவற்றிலுமே அவள் கலந்து கொள்ளாமல் நடைபிணமாக மாறி விட்டாள்.
ஒருநாள், நிலைமை மோசமாக, பள்ளி அருகிலிருந்த கடையிலிருந்து அந்த பானத்தை வாங்கி வந்து குடித்துப் பார்த்தார், பெண்ணின் தந்தை. மற்ற இடங்களில் வாங்குவதை விட, வித்தியாசமான சுவையில் இருக்கவே, பரிசோதித்து பார்த்ததில், போதைப் பொருள் கலந்து இருப்பது தெரிந்தது. போதைப் பொருளை கலந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு விற்று, அடிக்கடி வாங்கும்படி செய்துள்ளார், அந்த கடைக்காரர்.
சுதாரித்து, முறையான மருத்துவ சிகிச்சைக்கு பின், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறாள், அச்சிறுமி. பள்ளியிலும் புகார் கொடுத்து, அக்கடைக்காரரை கண்டிக்க சொல்லி இருக்கின்றனர்.
பெற்றோர்களே... இனி, உஷாராக இருங்கள்!
சு. உமா, ஆதிச்சபுரம், திருவாரூர் மாவட்டம்.

இந்த, 'ஐடியா'வை பின்பற்றலாமே!
புதிதாக அறிமுகமான தோழி ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். என் போன் நம்பர் மற்றும் முகவரியை கேட்டு, ஒரு நோட்டில் குறித்துக் கொண்டாள். அதில், அவள் மற்றும் அவளது கணவருடன் உடன் பிறந்தவர்கள், ஒன்று விட்ட உறவினர்கள், நண்பர்கள் பெயர், போன் நம்பர், முகவரியுடன் எழுதியிருந்தாள்.
காரணம் கேட்டதற்கு, 'ஒரு நல்லது கெட்டதுக்கு அழைக்கும்போது, எவ்வளவு யோசித்தாலும் யாராவது ஒருவர் பெயராவது விடுபட்டு விடுகிறது. அதனால், எங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் உறவினர், தெரிந்தவர் என அத்தனை பேர் விபரங்களையும் குறித்து, வைத்துக் கொள்வோம். எந்த ஒரு நிகழ்வானாலும், யாரும் அழைக்கப்படாமல் விடப்படுவதில்லை...' என்றாள்.
பல வைபவங்களுக்கு கடைசி நேரத்தில் எவ்வளவு தான் யோசித்தாலும், ஒரு சிலரை விட்டு விட்டு, அவர்களின் மனத்தாங்கலுக்கு ஆளாகிறோம்.
இந்த, 'ஐடியா'வை செயல்படுத்தினால், வேண்டியவர்களை, இந்த நோட்டை பார்த்தே அழைத்துக் கொள்ளலாம் அல்லவா. மேலும், நம் உறவினர், நண்பர்கள் பற்றி நம் குழந்தைகளும் அறிந்து கொள்வர்.
வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக, நானும் எழுத ஆம்பித்து விட்டேன். நீங்களும் இந்த, 'ஐடியா'வை பின்பற்றலாமே!
— டி. சவரிமுத்தாள், துாத்துக்குடி.

குலுக்கல் முறையில் வியாபாரம்!
கட்டடத்திற்கு வெள்ளையடிக்கும் வேலை செய்து வந்தார், நண்பர். ஒருநாள், வெள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது, சாரம் ஒடிந்து கீழே விழுந்ததில், கால் முறிந்தது.
சில நாட்களிலேயே குணமானாலும், வேலைக்கு செல்ல முடியாத நிலை. அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ முடியாது. எனவே, இருந்த இடத்திலேயே செய்யக் கூடிய வேலையை தேடி அலைந்தார்.
எதுவும் அமையாததால், வாடகைக்கு தள்ளு வண்டி பிடித்து, வீட்டு வாசலில் நிறுத்தி, வாழைப்பழம் விற்க துவங்கினார். ஆரம்பத்தில் வியாபாரம் சுமாராக இருந்தது. இதை பெரிய அளவில் கொண்டு வர விரும்பினார்.
வாழைப்பழம் வாங்க வரும் வாடிக்கையாளரிடம், மொபைல் எண்ணை வாங்கிக் கொள்வார்.
அன்று முழுதும் பழம் வாங்கியவர்களின் மொபைல் எண்களை தனித்தனி தாளில் எழுதி, குலுக்குவார். வந்த எண்ணிற்கு போன் செய்து, 'உங்களுக்கு, குலுக்கல் முறையில், 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக வழங்கப்படுகிறது; வந்து வாங்கிச் செல்லுங்கள்...' என்பார்.
இப்படியே தினம் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக தந்து விடுவார். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரத் துவங்கினர்.
'பழம் விற்க ஆரம்பித்த நாட்களில் இரண்டு தார் பழம் தான் விற்கும். இப்போது ஒரு நாளைக்கு, 20 முதல் 25 தார் வாழைப் பழங்கள் விற்பனையாகிறது. கூலி வேலையில் கிடைத்த சம்பளத்தை விட, பன்மடங்கு லாபம் கிடைக்கிறது. மேலும், வேறு இடத்தில் இன்னொரு கடை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்...' என்று கூறியதை கேட்டு, சந்தோஷமாக இருந்தது.
சிறு வியாபாரிகளே... வியாபாரம் ஆகவில்லையே என்று புலம்பாமல், மாற்று யோசனை செய்து, உங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.
- எம்.எம். முத்தையா, திருப்பூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-202216:22:41 IST Report Abuse
சாம் ஆதிச்ச புரம் நான் பிறந்த ஊர்...
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
23-மே-202214:29:23 IST Report Abuse
R Ravikumar @உமா, ஆதிச்சபுரம், திருவாரூர் மாவட்டம். , பள்ளி நிர்வாகத்திடம் மட்டும் சொன்னால் போதாது . போலீசில் புகார் கொடுங்கள் . புகார் எடுத்து கொள்ள மறுத்தால் , ஆன்லைன் புகார் கொடுங்கள் . இல்லை என்றால் குறைந்த பட்சம் எழுத்து பூர்வ அறிக்கை / விவரம் போலீஸ்க்கு தெரியப்படுத்துங்கள் . குளிர்பானத்தில் போதை மருந்து கலப்பு என்பது கொடும் குற்றம் . ஒருவேளை கடைக்காரர் நிரபராதியாக கூட இருக்கலாம் ஆனால் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு இருக்கிறது . புகார் கொடுத்தால் தான் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் மற்றும் weekly report submission என்று அவர்களுக்கு தொந்தரவு , ஆனால் குறைந்தபட்சம் அதிகார பூர்வமற்ற விவரத்தை அளித்தால் கூட காவல் துறை நடவடிக்கை எடுக்கும் , என் என்றால் அதில் அவர்கள் ப்ரோமோஷன் / சம்பள உயர்வு என்று சில நன்மைகள் உள்ளதால் அவர்கள் விசாரிப்பார்கள் . ஒரு சில இலை சாற்றினை கலந்தால் இவ்வாறு இருக்கும் ( பெயர் சொல்ல விரும்பவில்லை ) . அதனை நாட்டு பாணத்தில் கலந்து விற்பார்கள் வட இந்தியாவில் . நம் தமிழ் நாட்டிற்கும் வந்து விட்டதோ என்று எனக்கு கவலை வருகிறது . அரசுக்கு தெரிவிப்பது நல்லது .
Rate this:
Manian - Chennai,ஈரான்
25-மே-202209:47:19 IST Report Abuse
Manianநல்ல கருத்தே. இங்கே போலீசுக்கு போனால், மாமூல் கலாசாரத்தால் போலீசு உடனே கலப்படகாரருக்கு வத்தி வைத்துவிடுவாரே? ஆகவேதானே ரகசியமாக தகவல் கொடுப்போர்கள் இறைவனடி சேர்கிறார்கள். ஆகவே சற்று யோசித்து சமுதாய சேவை செய்யும் நல்லவக்கீல் மூலமாகப் போகவேண்டும். பணம் ஏராளம் சம்பாதித்து பணி மூப்படைந்த வக்கீல்கள் சமூகப் பணி மிக மிக குறைவே எதிர் மறை எண்ணமில்லை, இது ஒரு அபாய அறிவிப்பே....
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
26-மே-202210:40:46 IST Report Abuse
R Ravikumarஉங்கள் கருத்து சரிதான். இல்லை என்றால் NCB (போதை பொருள் தடுப்பு பிரிவு) இடம் தகவல் சொல்ல வேண்டும். அதற்கும் மொட்டை கடிதம் தான் போட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சாமானியனாக அதைத்தான் செய்ய முடியும். அல்லது அதிகார்பூர்வற்ற அறிக்கை கொடுத்து விட்டு வர வேண்டியது தான், வக்கீல் மூலமாக முயற்சி செய்தால், அவரே "நீங்கள் ஏன் தலைஇடுகிறீர்கள்" என்று கேட்பார் . திருவாளர் பொதுஜனம் ரொம்ப பாவம் சார் ....
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
22-மே-202210:22:16 IST Report Abuse
Manian டி. சவரிமுத்தாள், துாத்துக்குடி. இந்த முறையை விதி முறை(முடிவு )சொல்லி உதாரணம் தருதல் -அல்காரிதம் அல்லது டிடக்டிவ் லாஜிக் (Deductive Logic/reasoning) என்பார்கள். உதாரணமாக, புவி ஈர்ப்பு சக்தி என்பது ஒரு பொருளை மேலே போகவிடாத சக்தி. ஆதாரம்: தேங்காய் ,மாங்காய் தரையை நோக்கி விழுகின்றன( மேலே ஆகாயத்தில் பறந்து அண்டத்தில் கலப்தில்லை). இதுவே தோழியின் கோட்பாடானஅட்ரஸ் சேமிப்பு. இன்னொரு வித தர்க்கவாதம் இண்டக்டிவ் (_Inductive reasonig or logic) ரீசனிங்க், லாஜிக்). இது ஆதாரங்களிலிருந்து, முடிவு விதி கூறல். இது கற்பிக்க படாத அனுபவ அறிவு யாராவது இந்த அட்ரஸ் புக்கை தவறுதலாகவோ, எதற்க்கும இருக்கட்டுமே என்றோ, திருடியோ போய் விற்றால்- விளம்பரங்கள், நம்மை கண்காணித்து வீட்டில் திருடுதல், கற்பழித்தல்... என்று எது வேண்டுமானலும் நடக்கலாம் (கற்றது, பெற்றது, கேட்டது..), ஆகவே, இந்த ஏடு, பூட்டிய அலமாரியில்தான் இருக்கவேண்டும், பெருமையாக காட்ட இல்லை. விதி காணல் -விலை மதிப்பில்லாத பொருளில் அட்ரஸ்புக்கு மிக முக்கியமானது. குடும்ப, நண்பர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். தனியாக இருப்போருக்கு ஆபத்தை உண்டாக்கலாம். இதை எதிர்மறை எண்ணமாக நினைக்காமல், புள்ளி விவர வருங்கால ஆபத்தாக எண்ணவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X