ஒன்று தான்!
நேற்றைய எதிர்க்கட்சி
இன்றைய ஆளும் கட்சி
இன்றைய எதிர்க்கட்சி
நேற்றைய ஆளும் கட்சி!
நேற்றும் இன்றும் கட்சிகள்
ஒரே மாதிரியாகத்தான்
இருக்கின்றன
எல்லா காட்சிகளிலும்!
சட்டசபையில்
கூச்சல், குழப்பம்
வெளிநடப்பு, போராட்டம்
கட்சித் தாவல்!
சொத்துக் குவிப்பு
வழக்குப் பதிவு
கொலை, கொள்ளை, கற்பழிப்பு
குற்றச்சாட்டுகள்!
தொழில் முனைவோரை ஈர்க்க
வெளிநாட்டு பயணம்
பல்லாயிரம் பேருக்கு வேலை
என விளம்பரம்!
நிதி வேண்டியும்
உரிமை வேண்டியும்
சட்டம் மாற்றவும்
மைய அரசுக்குக் கடிதம்!
இலவச அறிவிப்புகளும்
சலுகைகளும்
கடன் தள்ளுபடிகளும்
விலை உயர்வுகளும்!
எக்காலத்திலும் மாற்றம்
இல்லாமல் தான்
இருக்கின்றன
ஆட்சி மாறினாலும்!
குட்டை ஒன்று தான்
மட்டைகளும் ஒன்று தான்
வேடிக்கை பார்க்கும்
மக்களும் ஒன்று தான்!
சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.