நதியில் தண்ணீர் உண்டு. ஏரிகளிலும், அருவிகளிலும் தண்ணீர் இருக்கிறது. ஆனால், கைகளில் அள்ளி பருக முடியாது. மிக கடுமையான குளிர், அந்த தண்ணீரை பனிக்கட்டியாக்கி விட்டது.
மேகாலயா மாநிலம், தவாங்கு கிராமத்தில் இருக்கும் இந்த ஏரி, முழுக்க முழுக்க ஐஸ் ஆகி இருப்பதை படத்தில் காணலாம். தண்ணீர் பாறை போல் ஆகிவிட்டதால், அதன் மீது நடந்தும் போக முடியும்.
தண்ணீர் வேண்டும் என்றால் ஐஸ் கட்டிகளை உடைத்து பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டினால் தான் தண்ணீர் கிடைக்கும். இங்குள்ள மக்களுக்கு இந்த கடும் குளிரிலும் சிரமப்பட்டு வாழ்வது பழகி விட்டது. ஆனால், சுற்றுலா வருபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
ஜோல்னாபையன்