படத்தில் உள்ள இடம், ஒன்றிணைந்த ரஷ்யாவிலிருந்து பிரிந்த அசர்பைஜான் நாட்டின் தலைநகர், பாகு நகர். இந்நகரின் பின்னணியில் தெரிவது, 'யானார் டாக்' என்ற எரிமலை.
இந்த எரிமலை பல நுாற்றாண்டுகளாக எரிந்துகொண்டே இருந்தாலும், வெடித்துச் சிதறுவதில்லை. இந்த எரிமலையை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவுக்கு அதிக அளவு வெப்பக் காற்று வீசும். அவ்வளவு வெப்ப சூழ்நிலையிலும், மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர்.
இந்த எரிமலையை காண ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
— ஜோல்னாபையன்