அசத்தலான டாடா ஹாரியர் எஸ்யூவி.,யில் புதிதாக எக்ஸ்இசட்எஸ், எக்ஸ்இசட்எஸ் டூயல் டோன், எக்ஸ்இசட்எஸ் டார்க் எடிஷன் என மூன்று வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன. பனோரமிக் சன்ரூப், ஆர்17 டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல், 6 நிலைகளில் பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் உட்பட பல அம்சங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன.
தவிர, புரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 5 சீட்டர், எல்இடி டிஆர்எல், 8.8 இன்ச் புளோட்டிங் ஐலேண்ட் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைப்பு, ஏர் பியுரிபயர், லெதர் ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆப்-ரோடு ஏபிஎஸ், குரூஸ் கன்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டிராக் ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் சிறப்பம்சம்,
இதன் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் 170 பிஎச்பி பவரையும், 350 என் எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல்/ 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
விலை: ரூ. 20-21.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்:
Tafe ACCESS Tata - 74016 99805
Gokulam Tata Motors - 91500 24433
கோவை டீலர்: SRT Tata - 99448 99448