அறியப்படாத அம்மன்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அறியப்படாத அம்மன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 மே
2022
08:00

நம் நாட்டில் அறியப்படாத பல தெய்வங்கள் உள்ளன. அவர்களில், சூலினி என்ற அம்மனும் அடக்கம். இவள் யார் தெரியுமா?
மனிதர், தேவர், விலங்கு என்ற எந்த சக்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றான், இரண்யன் என்ற அசுர மன்னன். இதனால், ஆணவம் கொண்ட அவன், தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்று உத்தரவிட்டான்.
'ஓம் இரண்யாய நமஹ' என்று, குருகுலத்தில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்பட்டது. ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன், இந்த உத்தரவை ஏற்கவில்லை.

தாயின் கர்ப்பத்தில் இருந்த போது, திருமாலின் கதையை, நாரதர் சொல்ல கேட்ட அவன், நாராயண பக்தனாக விளங்கினான். 'ஓம் நமோ நாராயணாய நமஹ' என்பது அவனது தாரக மந்திரமாக மாறியது.
பெற்ற பிள்ளையே தனக்கு எதிராக மாறியதால், ஆத்திரமடைந்த இரண்யன், அவனைப் பல வழிகளிலும் கொல்ல முயன்றான். ஆனால், திருமால் அருளால் தப்பினான், பிரகலாதன்.
ஒரு கட்டத்தில் இரண்யனின் தொல்லை எல்லை மீறவே, மனிதன், மிருகம், தேவர் என்ற வித்தியாசமான கலவையாக, நரசிம்மர் என்ற பெயர் தாங்கி வந்து, அவனை அழித்தார், திருமால். அப்போது, அவர் அதீத கோபத்தில் இருந்தார். அவரது கோபத்தை தணிக்க சிவன், நரசிம்மத்தையும் விட உக்ர சக்தியாக, சரபேஸ்வரர் என்ற பெயர் தாங்கி தோன்றினார்.
சரபேஸ்வரரின் உக்கிரம், நரசிம்ம உக்கிரத்தை தணித்தது.
பறவையும், மனித, மிருக முகமும் கொண்டவராக தோன்றினார், சரபேஸ்வரர். அந்த பறவைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. அதில் ஒன்று காளி, மற்றது சூலினி. காளியை பிரத்யங்கிரா என்று அழைத்து, அவளுக்கு தனி வழிபாடு உருவானது. சூலினி என்பவள், துர்க்கை என்ற பெயரில் வழிபடப்படுகிறாள்.
இவள் சூரியன், சந்திரன், அக்னி என்ற முப்பெரும் சக்திகளை உள்ளடக்கியவள்.
எதிரிகளை வெற்றி கொள்ள செல்லும் மன்னர்கள், சூலினியை வழிபட்டே கிளம்பினர். பில்லி, சூன்யம் போன்ற கொடிய சக்திகள், மந்திரம் தெரிந்தவர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் யார் மீது ஏவுகின்றனரோ, அவர்களை அழித்து விடும். இந்த சக்திகளை அடக்கியாள்பவள், சூலினி.
மூன்று பிரிவு கொண்ட சூலத்தை ஏந்தியவள் என்பதால், இவள் சூலினி எனப்பட்டாள். இவளது கையிலுள்ள சூலத்தை, அம்மன் கோவில்களின் முன் ஊன்றி வைத்திருப்பர். இதற்கு எலுமிச்சை சாறு அபிஷேகம் செய்வதன் மூலம், அம்பாள் மனம் குளிர்ந்து, எதிரிகளை விரட்டுவாள்.
சூலினி துர்க்கையை வழிபடுவதன் மூலம், எதிரி நாடுகளால் பரப்பப்படும் கொடிய நோய்களில் இருந்து தீர்வு கிடைக்கும்; அவர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியாகும்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிவாலயங்களின் பிரகாரத்தில், வடக்கு நோக்கி துர்க்கை சிலை இருக்கும். கர்நாடக மாநிலத்திலுள்ள மூகாம்பிகையும் இவளது அம்சமே. நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை நடக்க, சூலினியை வழிபடுவோம்.

தி. செல்லப்பா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X