இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
08:00

'ஈகோ'வை விட்டு கற்றுக்கொள்ளுங்கள்!
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், நண்பர். எப்போதும், எல்லாரிடமும் கலகலப்பாக பேசி, சிரித்தபடி பழகுபவர், சில நாட்களாக சிடுசிடுவென இருந்தார். தற்போது பணிபுரியும் நிறுவனத்திலிருந்து விலகி, வேறு வேலைக்கு போக எண்ணுவதாக கூறினார்.
அவருக்கு ஏதோ உளவியல் பிரச்னை என்பது, அவரது பேச்சு, நடவடிக்கை மூலமாக தெரிந்தது. அவரை தனியே அழைத்துச் சென்று, ஆதரவாக பேசி, பிரச்னையை கேட்டேன். அந்நிறுவனத்தில், பணியாற்றும் சீனியர்களில் அவரும் ஒருவர்.

ஆரம்பத்திலிருந்தே கோப்புகள் மூலம் கையாண்ட அவருக்கு, தற்போது, கணினி வழி, 'டிஜிட்டல்' முறை தெரியவில்லை. அவை நன்றாக தெரிந்த ஜூனியர்களிடம் கேட்க, தலைகுனிவாக இருப்பதாகவும் கூறினார்.
'தினமும் புதுப் புது தொழில்நுட்பம் வந்து கொண்டே இருக்கிறது. நாம் பழமையிலேயே கிடக்காமல், புதுமைக்கேற்றவாறு நம்மை, 'அப்டேட்' ஆக்கிக் கொள்ள வேண்டும். ஜூனியர்களிடம், 'ஈகோ' பார்க்காமல், அவர்களை நட்போடு அணுகி கற்றுக்கொள்ளுங்கள்...' என்று அறிவுறுத்தினேன்.
அதன்படியே நடந்தவர், தானும், 'அப்டேட்' ஆகி, இப்போது பழையபடி சகஜமாக மாறி விட்டார்.
வாசகர்களே... எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்து விடாது. காலத்திற்கேற்றவாறு நம்மை பொருத்திக் கொள்ள, 'ஈகோ'வை விட்டு, கற்றுக்கொள்ளுங்கள்!
- ஆர். செந்தில்குமார், மதுரை.

மரங்களை தத்து எடுப்போம்!
நண்பரின், புது வீடு புகு மனை விழாவுக்கு போயிருந்தேன். அவரது வீடு புறநகரில் இருந்தது. அவர் வீட்டுக்கு அருகில் புதர் மண்டி கிடக்கும். அதை சுத்தம் செய்து, குழிகள் தோண்டி வைத்திருந்தார்.
'ஏன்...' என்று விசாரித்தேன்.
'வீட்டை சுற்றிலும் புறம்போக்கு நிலம் தான். எனவே, மரம் வைக்கலாம் என்று தோன்றியது. எல்லாரும் புதிதாக கன்று நட கூறினர். ஆனால், நான் சாலை விரிவாக்கம் மற்றும் மரங்கள் அகற்றப்படும் இடத்திலிருந்து மரங்களை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று எண்ணுகிறேன்...' என்றார்.
மரங்களை தத்து எடுப்பது, புதுமையான அணுகுமுறையாக இருந்தது. அவரது முயற்சியை நினைத்து ஆச்சரியப்பட்டு, வாழ்த்தி வந்தேன்.
ஏற்கனவே வளர்ந்த பழைய, பெரிய மரங்களை காப்பாற்றுவதும், புதிய மரங்களை நட்டு வளர்ப்பதை விட சிறப்பானது.
இவரை போலவே, பெரிய நிறுவனங்கள், ஆங்காங்கே அகற்றப்படும் மரங்களை தத்து எடுத்து, தங்கள் இடத்தில் வைத்து பராமரித்தால், நல்ல பலனும், புண்ணியமும் கிடைக்கும்.
- கி. ரவிக்குமார், நெய்வேலி.

புது விதமான திருட்டு!
ரயிலில், பொது பெட்டியில் பயணம் செய்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், சக பயணியரில் பலரும், தரையிலும், பொருட்கள் வைக்கும் இடங்களிலும் அமர்ந்து பயணம் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள், இருக்கை அடியிலும், நடுவிலும் படுத்து துாங்க ஆரம்பித்தனர்.
இருக்கையில் இருந்த எங்களுக்கு, அது அசவுகரியமாக இருந்தாலும், வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தோம்.
திருப்பூரை, ரயில் நெருங்கிய போது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் இறங்க ஆயத்தமானார். அப்போது, 'ஒரு கால் கொலுசை காணவில்லை...' என கூறி, பதட்டமானார். அவருடன் சேர்ந்து நாங்களும் கொலுசை தேட ஆரம்பித்தோம். ஆனால், கொலுசு கிடைக்கவில்லை.
திடீரென இன்னொரு பெண், 'என் காலில் இருந்த இரண்டு கொலுசுகளையும் காணவில்லை...' என, கூச்சல் போட்டாள். இதனால், மேலும் பதட்டமடைந்தோம்.
அவரவர், தங்கள் பொருள், நகை என, அனைத்தையும் சோதனை செய்ய ஆரம்பித்தோம்.
இரண்டு பெண்களுக்கு ஒரே நேரத்தில் கொலுசு காணாமல் போனதால், இது திருட்டு தான் என்றும், இந்த திருட்டை செய்தவர், அந்த பெண்களின் இருக்கையின் கீழ் படுத்திருந்த ஆசாமியாகத்தான் இருக்கும் என, சந்தேகப்பட்டோம். அந்த ஆசாமி திருப்பூருக்கு முன்பே இறங்கி சென்று விட்டார்.
ரயிலில் ஏற்பட்ட சலசலப்பால், பக்கத்து பெட்டியில் இருந்த நபர் ஒருவர், விபரம் கேட்டு, 'திருடர்கள், இப்போது புது புது வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
'குறிப்பாக, ரயில்களில் பொது பெட்டிகளில், பெண்களின் காலடியில் படுத்து, அவர்கள் அயர்ந்து துாங்கும் போது, கால்களில் கிடக்கும் கொலுசுகளை, 'கட்டிங் பிளேயர்' உதவியுடன், 'கட்' பண்ணி சென்று விடுகின்றனர். இதே போன்று, பெங்களூரு ரயிலிலும் ஒரு முறை நடந்தது...' என்றார்.
திருட்டு எந்த ரூபத்திலும் நிகழலாம். ஆகவே, ரயிலில் பயணம் செய்யும் போது, மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அ.சாரதா, தர்மபுரி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fardhikan - Rajakambeeram,இந்தியா
30-மே-202213:24:40 IST Report Abuse
Fardhikan அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
30-மே-202211:12:52 IST Report Abuse
Manian ஆளுமை திறனில் ஒரு குணம்- தேவையானதை, தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளுதல். நண்பருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்க வேண்டும்.அவர் தலைமுறை முன்னேறிய போது, முந்தின தலை முறையும் முன்னேறி இருக்கவில்லை என்பதை எப்படி மறந்தார். இது எனக்கு தெரியாது, கற்றுக் கொடுப்பாயா என்று கேட்க வெட்கப்படும் நிலை. ஈகோ இல்லை. ஆகவேதான் மேலை நாடுகளில் தொடர் கல்வி ( )மருத்துவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இங்கே டிகிரியோடு கல்வி முடிந்தது, வயதாச்சு.. என்ற எண்ணங்களே புதியன கற்பதை ஊக்குவிப்பதில்லை
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
29-மே-202211:52:42 IST Report Abuse
Manian அ.சாரதா, தர்மபுரி இதை தடுக்க தானே ஒரு செட் முலாம் பூசின நகைகள்-கில்ட் ஆபரணம் சைனா விற்கிறது. ரயில் பயணத்தில் இதை அணிந்தால், இது புது தங்க நகையா என்று டிக்கட் எடுத்து வந்து கேட்கவா போகிறார்கள்? ரயிலில் புது பட்டு புடவை உடுத்தியா போகிறோம்? ஒரே ஆபத்து என்னான்னா, போலி கொலுசு திருடி ஏமாந்தவன் காலை கீறிவிட்டு எறங்காமல் இருக்க வேண்டும். ஆக ஒரு ஒட்டி துண்டை படுக்கை பலகை அடியில் பரவலாகப் போட்டால் ரயில் எலிகள் அவனை கடிக்கும்.ரயிலடி மாடன் எலிகண்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X