அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
08:00படித்த குட்டி குட்டி தகவல்கள் மட்டுமே, இந்த வாரம்...
வகுப்பில் மாணவர்களிடம், 'எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்...' என்று கேட்டுக் கொண்டிருந்தார், ஆசிரியர்.
'நான் இங்கிலாந்தின் பிரதமராகப் போகிறேன்...' என, ஒரு மாணவன் சொன்னதும், எல்லாரும் சிரித்தனர்.
ஆசிரியர் சுதாரித்துக் கொண்டு, 'நல்லது. உன் விருப்பம் நிறைவேறட்டும்...' என்று சொல்லிச் சென்றார்.
பின்பு, அந்த மாணவன் கல்லுாரி சென்றபோதும், இதே கேள்வி கேட்கப்பட்டது. இதே பதிலை சொல்லியபோது, மற்றவர்கள் சிரித்தனர்.
பணி செய்ய ஆரம்பித்தபோதும், தன் நண்பர்களிடம், 'நான் இங்கிலாந்தின் பிரதமர் ஆவேன்...' என்று அடிக்கடி சொல்லி வந்தார்.
அப்படியே சாதித்தும் காட்டினார், அவரது பெயர், பெஞ்சமின் டிஸ்ரேலி.

இமயமலையின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடைந்த முதல் மனிதர், எட்மண்ட் ஹிலாரி.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டு கீழிறங்கிய ஹிலாரியிடம், பலரும் கேள்வி கேட்டனர்.
'நீங்கள் மலை ஏறியபோது, எது உங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்தது, அங்கிருந்த கடும் குளிரா, பனி சறுக்கும் பாறைகளா, உணவு செரிமானம் ஆகாத பாதிப்பா, சுவாசிக்க ஏற்பட்ட சிரமங்களா...' என்று பலவாறு கேட்டனர்.
'நீங்கள் கூறிய எந்த விஷயமும் எனக்கு சவாலாக இல்லை. மாறாக, அவ்வப்போது என் உள்ளத்தில் தோன்றிய ஒரு எண்ணத்தை வெல்வதே எனக்கு சவாலாக அமைந்தது.
'அதாவது, 'உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது. பலரும் முயன்று தோற்று போயிருக்கின்றனர். உயிரை கூட விட்டிருக்கின்றனர். எனவே, உன் முயற்சியை விட்டு விடு...' என்று, என் மனதில் தோன்றிய எதிர்மறை எண்ணம் தான், சவாலாக அமைந்தது. ஆயினும், நான் அந்த எண்ணத்தை ஆட்கொள்ள விடாமல் போராடி வென்றேன்...' என்றார், எட்மண்ட் ஹிலாரி.

எறும்புகளுள், 10 ஆயிரம் இனங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பட்டியலிட்டுள்ளனர், ஆய்வாளர்கள். ஒவ்வொரு வகை எறும்புக் குழுவும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ராணி எறும்புகளைப் பெற்றுள்ளன. 'ஆர்மி ஆன்ட்' என்ற தென்னாப்ரிக்க எறும்பு, தன் குழுவில், 7 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு சென்று பிரசவம் பார்த்துக் கொள்ளக் கூடாது என்று, 2011ல், அவசரச் சட்டத்தை பிறப்பித்தது, சீனா.
ஏனெனில், 1 சதுர கி.மீ., பரப்பளவில், ஒரு லட்சம் பேர் வீதம் இங்கே வசிக்கின்றனர். புதியவர்களும் சென்று அங்கேயே தங்கினால், இட நெருக்கடி அதிகரிக்கும் என்பதால், இந்த தடைச் சட்டம் அமலுக்கு வந்தது.
இந்தியாவில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், 1 சதுர கி.மீ., பரப்பளவில், 60 ஆயிரம் பேர் வீதம் வசிக்கின்றனர். இவர்கள், வேலை பார்ப்பதற்காக, பிற மாநிலங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்கள்.

காய்கறி சாலட் நல்லதா?
பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதாலும், தோட்ட வேலைகள் செய்வதாலும், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுப்பதாக கண்டுபிடித்துள்ளது, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சிக் குழு.
புகை பிடித்தல், துாசிகளால் நுரையீரல் புற்றுநோய் தாக்கியவர்கள், பச்சைக் காய்கறிகளை உண்ணத் துவங்கியதும், அது, சுமார், 15 சதவிகிதம் பேரிடம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதையும் கண்டுபிடித்தனர், ஆராய்ச்சியாளர்கள். எனவே, எலுமிச்சம் பழம் பிழிந்த காய்கறி சாலட்டுகளை இருவேளையாவது சாப்பிட்டு வருவது நல்லது, என்கின்றனர்.
சீனாவில், தினமும், 8.5 கோடி நாளிதழ்கள் விற்பனையாகின்றன. இரண்டாவதாக, இந்தியாவில், 7.25 கோடி பிரதிகள் விற்பனையாகின்றன. ஆனால், உலகில் நான்கு பேருக்கு ஒருவர் வீதம் நாளிதழ் வாங்குவது நியூசிலாந்தில் மட்டுமே உள்ளது.
காங்கிரசில், நேரு குடும்பத்தைச் சேராத, முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை, முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கு உண்டு. 13 மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்த ஒரே இந்திய பிரதமர் இவர்.
சிறந்த நடிப்பிற்காக, ஏழு முறை சிபாரிசு செய்யப்பட்டும், ஒருமுறை கூட ஆஸ்கார் பரிசை வெல்லாதவர், ரிச்சர்ட் பர்ட்டன் என்ற இங்கிலாந்து நடிகர். இவர், பிரபல நடிகை எலிசபெத் டெய்லரின் முன்னாள் கணவர்.
கடந்த, 1962ம் ஆண்டு வெளியான, 'ஸ்பைடர் மேன்' காமிக் புத்தகத்தின் முதல் பிரதி, 4.95 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. 49 ஆண்டுகளுக்கு பின், ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு விற்பனையான முதல் இதழின் பிரதி, 'ஸ்பைடர் மேன்' காமிக் புத்தகம் தான்.
பயணங்களின்போது, 70 சதவீதம் ஜப்பானியர்கள், புத்தகம் படிக்கின்றனர். 20 சதவீதம் பேர், இணையம் மூலம் புத்தகங்களை வாசிக்கின்றனர். மீதமுள்ள, 10 சதவீதம் பேர், ஏதாவது ஒரு சிறு பணியில் ஈடுபட்டபடி, பயணம் செய்கின்றனர். மொபைல் போன்களை அவர்களில் பலர் பயன்படுத்துவதே இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம்., பள்ளிக்கு, சிவாஜி கணேசன் வருகை தந்தபோது, பள்ளியின் பார்வையாளர் பதிவேட்டில் எழுதிய வாசகம்: நான் படிக்காதவன்; ஆனால், படிப்பின் அருமை தெரிந்தவன்.
வரலாற்றைக் குறிக்கும், ஹிஸ்டரி என்ற சொல், 'ஹிஸ்டோரியா' எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. எனவே, வரலாறு என்பது மனித இனத்தின் வாழ்க்கைப் பதிவேடு என்று சொல்லலாம்.
மூன்று மாளிகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று சிவப்பு, மற்றொன்று பச்சை, மற்றது வெள்ளை. நடுவில் இருக்கக்கூடிய மாளிகையின் இடதுபுறத்தில், சிவப்பு மாளிகை இருக்கிறது. நடுவில் இருக்கக்கூடிய மாளிகையின் வலதுபுறத்தில், பச்சை மாளிகை இருக்கிறது. அப்படி என்றால், வெள்ளை மாளிகை எங்கே?

விடை: வெள்ளை மாளிகை, அமெரிக்கா தலைநகர், வாஷிங்டன் டி.சி.,யில் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
31-மே-202205:57:28 IST Report Abuse
Manian ....
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
31-மே-202205:53:55 IST Report Abuse
Manian ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X