அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
08:00

ரா. வேதநாயகம், வடமாதிமங்கலம், திருவண்ணாமலை: 'சிகரெட் குடிப்பது உடல் நலத்துக்கு ஆபத்தானது...' என, அதன் பாக்கெட்டில் அச்சிட ஆணையிட்ட அரசு, சிகரெட் நிறுவனங்களையே மூடி விடலாமே...
நல்ல யோசனை தான்... அதே போல, 'மஞ்சள் பை... மஞ்சள் பை' என, கூவிக் கொண்டிருக்காமல், 'பிளாஸ்டிக்' பைகளை உருவாக்கும் நிறுவனங்களையும் மூடி விடலாமே... யோசிக்குமா அரசு!

ம. அன்புசெல்வன், தேனி: அந்துமணி ஆகாமல் இருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?

உப்பு கிணற்றில் இருந்து, 'பம்ப் - செட்' மூலமாக நீர் எடுத்து, பாத்திகளில் பாய்ச்சி, அது, உப்பான பின் வாரிக் கொண்டிருந்திருப்பேன்... அதுவும் துாத்துக்குடியில்...

* ஆர். அமிர்தபாரதி, கன்னியாகுமரி: சசிகலா, அ.தி.மு.க.,வை கைப்பற்றினால் என்ன நடக்கும்?
ஊழல் வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவருக்கு ஓட்டுப் போடுவீர்களா அமிர்தபாரதி? மாட்டீர்கள் தானே... அதையே தான் மற்ற மக்களும் செய்வர்!

கே. பாலு, தென்காசி: வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்?
ரொம்ப, 'சிம்பிள்...' தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம்!

* எஸ். பாஸ்கர், ஆவலப்பம்பட்டி,கோவை: மாநில அரசுகளால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும்... பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 103.05 ரூபாயாக இருந்தபோது, மத்திய அரசின் வரி, 19.50 ரூபாய் தான். ஆனால், மாநில அரசின் வரி, 41.55 ரூபாய். மாநில அரசு நினைத்தால் விலையைக் குறைக்க முடியுமே!

ஜி.வி. மனோகரன், துாத்துக்குடி: 'பார்சல் ரயில்' தனியாருக்கு குத்தகையாமே...
மிகவும் பாராட்டக்கூடிய முடிவு... இதேபோல், பயணியர் ரயிலையும் செய்து விடலாம்... அரசு, வியாபாரம் செய்யாமல், மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும்!

மெய்.முருகப்பா, காரைக்குடி: அறிக்கைகள் விடுவதில் சிறந்தவர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால், ராமதாசிடம் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு, அவருக்கு தினசரி அறிக்கை எழுதிக் கொடுப்பவரை! (அவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!)

த. ராஜதுரை, திருப்பூர்: 'திராவிட மாடல் ஆட்சி' என்று, ஸ்டாலின் சொல்கிறாரே... அப்படின்னா என்னங்க?
ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குள், 'பெட்டி'யை மட மடவென்று நிரப்புவது தான்...

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikrishna - singapore,சிங்கப்பூர்
03-ஜூன்-202209:40:10 IST Report Abuse
Ravikrishna திராவிட மாடலுக்கு துணிச்சலான பதில் 👍👍👍
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
29-மே-202211:40:45 IST Report Abuse
Manian கே. பாலு, தென்காசி: அன்புமணி சார் வள்ளுவர் குறளில் வசன நடையில் பதில் சொல்கிறார். நண்பர்களிடம் இது பற்றி விளக்கமாக சொல்வதை இங்கே எழுதிகிறேன்- இலவச சமூக சேவை, ஆக, "தன்னம்பிக்கையும், விடா முயற்சி" என்பது, தோல்விகளை வழி மாற்று பாதை பலகை- நில்,கவனி,போ ஒரு வழிப்பாதை என்பது போல் நம்மை வழி நடத்தும் ஊக்க சக்தி, ஆக அது காட்டும் வழியில் விடா முயற்சி ஊக்கமாக செல்ல வேண்டும். எச்சரிக்கே இல்லலாத குறுக்கு பாதை விரைவில் செல்ல நினைப்பவர்களுக்கு வினை ஆகலாம்". 100 வேலைக்கு முயன்றும் கிடைக்காத வேலைகள்-பின்னால் அதிக சம்பளம் தரும் பெரும் வேலையில் என்னை மகிழ்வுடன் அமர்தியது அதுதான் கண்ணனின் "விடாது உன் கடமையை முழு மனதுடன் செய், பலன் தானே வரும்(நீ அதை தீர்மானிக்க முடியாது), தோல்வி என்று முயற்சசி செய்வதை கை விட்டால் கிடைக்க வேண்டிய பலனை இழப்பாய் அர்சுனா அர்சுனனே வென்றான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X