இல்லாமல் இருக்கலாமா!
வறுமை இருக்கலாம்
வசந்தம் பிறக்கலாம்
மனிதம் மறக்கலாமா?
ஆசை முளைக்கலாம்
அன்பு தழைக்கலாம்
பண்பு உதிரலாமா?
காசு இருக்கலாம்
கனவு பலிக்கலாம்
கருணை துறக்கலாமா?
நண்பர் இருக்கலாம்
அன்பர் இருக்கலாம்
வன்மம் வளர்க்கலாமா?
பாசம் படரலாம்
நேசம் தொடரலாம்
வேஷம் போடலாமா?
ஊரு இருக்கலாம்
உறவு இருக்கலாம்
உண்மை உறங்கலாமா?
காதல் கனியலாம்
மோதல் முறியலாம்
சாதல் இருக்கலாமா?
காட்சி கலையலாம்
சாட்சி சறுக்கலாம்
சூழ்ச்சி செய்யலாமா?
நெஞ்சை நிமிர்த்தலாம்
நீதி பேசலாம்
அஞ்சி வாழலாமா?
கொஞ்சி கிடைக்கலாம்
மஞ்சம் தொடுக்கலாம்
வஞ்சம் விதைக்கலாமா?
போதனை உரைக்கலாம்
சாதனை நிகழ்த்தலாம்
வேதனை விளையலாமா?
வேதம் வகுக்கலாம்
நாதம் இசைக்கலாம்
பேதம் பார்க்கலாமா?
பேச மறுக்கலாம்
பெருமை உரைக்கலாம்
பொய்மை மலரலாமா?
நரையும் தொடங்கலாம்
திரையும் மூடலாம்
இறையை மறக்கலாமா?
எஸ். முருகன், திருவள்ளூர்.