ரயில் பயணங்களின்போது, எதிர்படும் இயற்கை காட்சிகள் நம் மனதை கொள்ளை கொள்ளும். 'ரயில் மெதுவாக செல்லக் கூடாதா... அப்படி சில நிமிடங்கள் நின்று சென்றால், இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே...' என்று, ஏங்குவதும் உண்டு.
இந்த ஏக்கத்தைப் போக்க வந்து விட்டது, 'இந்துார் ஹெரிடேஜ்' ரயில்.
மத்திய பிரதேசம், அம்பேத்கர் ரயில் நிலையத்திலிருந்து, காலக்குண்ட் வரை, 15 கி.மீ., துாரம் வரை செல்லும் இந்த ரயில் தான், பயணியருக்காக சிறப்பு வசதியை அளிக்கிறது.
இந்த பாதையில் அழகிய இயற்கை காட்சிகளும், படால்பானி என்ற அருவியும் உள்ளது. அருவி உள்ள இடத்திற்கு வந்ததுமே, ரயில், குறிப்பிட்ட நேரம் நின்று செல்லும். அப்போது, பயணிகள், இறங்கி, அருவியை ரசித்த பின், மீண்டும் ரயிலுக்கு திரும்பி விடலாம்.
மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் இந்த ரயிலில் பயணம் செய்ய, சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர்.
ஜோல்னாபையன்