உலகில், மிகவும் நீளமான கார், 100 அடி உள்ளது. அமெரிக்கன் டிரீம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார், 1986ல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெ.ஆர்பெர்க் இதை உருவாக்கினார். சாதாரணமாக சாலைகளில் இதை ஓட்ட முடியாது. எனவே, ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
துரு ஏறிய அந்த காரை, மைக்கேல் மானிங் என்பவர், 2019ல் புதுப்பித்தார். புத்துயிர் ஊட்டிய போது கார் நீளம் ஒன்றரை அங்குலம் அதிகமானது. மீண்டும் கின்னசில் இடம் பிடித்தது. நீச்சல் குளம், கழிப்பறை உட்பட வசதிகள் இந்த காரில் உள்ளன!
- அபிஷேக்