வீ டூ லவ் சிறுவர்மலர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2022
08:00

என் வயது, 42;
பொறியியல் கல்லுாரியில், இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வமுடையவன்; சிறுவர்மலர் படிக்கும் போது, என் கதைகளுக்கான கருவை தேர்ந்தெடுக்கிறேன்.
என் மகன்கள், மத்திய பாடத்திட்ட பள்ளிகளில் படிப்பதால் தமிழ் மொழியில் வாசிக்க பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். கொரோனா தொற்று அதிகரித்திருந்த போது, சிறப்பு சலுகை விலையில் தினமலர் நாளிதழ் கிடைத்தது. வீட்டு வாசற்படிக்கு வந்து கொண்டிருக்கிறது.

உரிய நேரம் கிடைத்ததால் சிறுவர்மலர் இதழை வாசித்து, நன்றாக பயிற்சி பெற்றனர் மகன்கள். இப்போது, சரளமாக வாசிக்கும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். தினமலர் நாளிதழில் பொது அறிவு களஞ்சியமாக வரும், 'பட்டம்' பகுதியையும் விரும்பி படிக்கின்றனர்.
சிறுவர்மலர் இதழில் புள்ளிகளை இணைத்து, படம் வரைந்து, வண்ணம் தீட்டி மகிழ்கின்றனர். மேலும், 'உங்கள் பக்கம்!' பகுதியில், என் மூத்த மகன் வரைந்த ஓவியம் பிரசுரமாகி, 500 ரூபாய் பரிசு பெற்றது. அதில், 100 ரூபாயை, 'படிக்கட்டுகள்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக கொடுத்தான். அது, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
பள்ளிப்பாட நேரம் தவிர, ஆன்மிகமலர், வாரமலர் இதழ்களையும் விரும்பி வாசிக்கின்றனர். படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதில், சிறுவர்மலர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
- எஸ்.மலைச்சாமி, மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X