கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2010
00:00

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள பாப் அப் பிளாக்கர், நன்றாகச் செயல்பட்டு பாப் அப் விண்டோவினைத் தடுக்கிறது. ஆனால் சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களும் தடை செய்யப்படுகின்றன. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது?
– தி. மருத நாயகம், புதுச்சேரி
பதில்
: பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செய்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எக்ஸ்பியில் பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள். குறைந்தது சர்வீஸ் பேக் 2 வைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர்ல் Tools>>Pop Up Blocker என்று செல்லவும். இதில் Pop Up Blocker Settings  என்று கிடைக்கும். இப்போது ஒரு சிறிய பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் "Address of Web site to allow" என்று இருக்கும் இடத்தில், எந்த இணைய தளங்களில் இருந்து வரும் பாப் அப் விண்டோக்கள் தேவையோ, அவற்றின் முகவரிகளை டைப் செய்திடவும். பின் "Add" என்ற பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த தளத்திற்குச் சென்றால், இந்த தளம் தரும் பாப் அப் விண்டோக்கள் தடையின்றி வருவதனைக் காணலாம்.
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொகுப்பிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Tools/Options   சென்று Content டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "Block Popup Windows"  என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால்,  "Exceptions..." என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்து, அதன் பின் "Allow" பட்டனை அழுத்தவும். இது அந்த தளத்திற்கு பாப் அப் தடையை நீக்கிவிடும்.


கேள்வி: கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் என்பதில் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒருபுறம் Set Program Access and Defaults எனத் தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன? இதனால் என்ன பயன்?
–ஆ. தனசேகரன், மதுரை
பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults   வசதியினைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இணையத்தில் பிரவுஸ் செய்திட பயர்பாக்ஸ், இமெயில் பெற தண்டர்பேர்ட், போட்டோ பார்க்க பிக்சர் மேனேஜர், பாட்டு கேட்க விண் ஆம்ப் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு புரோகிராமினை நீங்கள் விரும்பலாம். பாடல் பைல் ஒன்றைக் கிளிக் செய்தால், விண் ஆம்ப் இயக்கப்பட்டு அந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என நீங்கள் விருப்பப்படலாம். இப்படி குறிப்பிட்ட புரோகிராம்களை, குறிப்பிட்ட பணிகளுக்கு செட் செய்த பின்னர், அந்த புரோகிராம்கள் டிபால்ட், அதாவது மாறா நிலையில் உள்ள, புரோகிராம்கள் என அழைக்கப்படும். அவ்வாறு அமைத்திட இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். ஆனால் ஓர் எச்சரிக்கை. இதனை மேற்கொள்ள நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராகக் கம்ப்யூட்டரை அணுகி இருக்க வேண்டும்.


கேள்வி: இன் பிரைவேட் பிரவுசிங் என்று கேள்விப்படுகிறேன். இந்த வசதியினை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமா?
–செ. மலர்விழி, திருப்பூர்
பதில்:
பிரைவேட் பிரவுசிங் என்பது குரோம் பிரவுசரில் முதலில் வழங்கப்பட்டது. குரோம் இதனை Incognito Mode  என அழைத்தது. நாம் இணையத்தில் செல்கையில், எந்த இணையதளங்களுக்குச் செல்கிறோம், என்ன பைல்களை டவுண்லோட் செய்கிறோம் போன்ற தகவல்கள் ஆங்காங்கே சேமிக்கப்படுகின்றன. பெரும்பாலான தளங்கள் உங்கள் விருப்பங்கள், ஐபி முகவரி மற்றும் உங்களைப் பற்றிய குறிப்புகளை குக்கிகள் என்ற பைலில் எழுதி உங்கள் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கின்றன. இதனால் அடுத்த முறை, நீங்கள் அந்த தளத்திற்குச் செல்கையில், குக்கிகள் பைலில் உள்ள தகவல்கள் படிக்கப்பட்டு, உங்களுக்கும் அந்த தளத்திற்குமான இணைப்பு விரைவில் நடைபெறுகிறது. இவ்வாறு இல்லாமல் ஒரு பிரவுசர், உங்கள் தேடல்களைப் பற்றிய தகவல்கள் எதனையும் பதிந்து வைக்காது என்ற வழக்கத்தினை குரோம் அறிமுகப்படுத்தியது. அதுவே பிரைவேட் பிரவுசிங் என்பதாகும். இதை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 8 InPrivate Browsing என அழைக்கிறது. இந்த வகை பிரவுசிங் போது, பிரவுசர் எதனையும் பதிந்து கொள்ளாது. குக்கிகள் ஏற்படுத்தப்படமாட்டாது. இதனால் இந்த வகை பிரவுசிங்கின் போது பார்த்த இணைய தளங்களின் முகவரிகளை, அடுத்த முறை டைப் செய்கையில், தானாக அது நிரப்பப்பட்டு காட்டப்படமாட்டாது. இந்த வகையில் பிரவுஸ் செய்திட File – Edit – View – Favorites – Tools –  என்று சென்று பின் இதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் InPrivate Browsing என்பதில் கிளிக் செய்திடவும்.


கேள்வி: என் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள், அதில் உள்ள கண்ட்ரோல் பேனல் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். நான் மாற்றங்கள் செய்யப்படக்கூடாது என்று எண்ணும் பிரிவுகளின் ஐகான்களை மறைக்க முடியுமா?
–சி. கரன்சந்திரன், கோயம்புத்தூர்
பதில்:
கண்ட்ரோல் பேனலில் உள்ள ஒவ்வொரு ஐகானும் ஒவ்வொரு பைலைக் குறிக்கிறது. அதன் எக்ஸ்டென்ஸன் cpl  ஆகும். நீங்கள் மறைக்க விரும்புகிற ஐகானிற்கான பைல் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள். பின்பு C:\Windows\Control.ini  பைலைத் திறந்து கொள்ளுங்கள்.[don’t load] எனத் தொடங்குகிற வரி அந்த பைலில் இருந்தால் அதன் அடியில் புதிய வெற்று வரியை உருவாக்குங்கள். இல்லையெனில் பைலின் இறுதிக்குச் சென்று புதிய வரியில் don’t load என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். மறைக்க விரும்புகிற பைலின் பெயரை டைப் செய்து அதை ஒட்டி = no என டைப் செய்யுங்கள். இனிப் பைலை பாதுகாத்து மூடுங்கள்.மேற்படி முறைக்குப் பதில் என்ற Tweak UI  புரோகிராமை நிறுவி இயக்குங்கள். Control Panel டேபைக் கிளிக் செய்து வேண்டாத ஐகான்களுக்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு ஓகே செய்திடவும்.


கேள்வி: விண்டோஸ் இயக்கத்தில் தரப்பட்டுள்ள கிளிப் போர்டில் அப்போது உள்ள டெக்ஸ்ட் அல்லது காப்பி செய்யப்பட்டதைப் பார்க்க என்ன செய்திட வேண்டும்?
–தே. இளமதி, காரைக்குடி
பதில்:
விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் ரன் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் Clipbrd  என டைப் செய்திடவும். உடனே கிளிப் போர்டு விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் காப்பி செய்தவை காட்டப்படும்.


கேள்வி: வேர்ட் தொகுப்பில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தின் மூலமாக, ஸ்பெஷல் கேரக்டர்களை அமைத்து எப்படி தேடுவது? தேடினால் கிடைக்குமா?
–சி. தியாகேசன், திண்டுக்கல்
பதில்:
நல்ல கேள்வி. பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில், சில ஸ்பெஷல் கேரக்டர்களை நாம் உருவாக்க முடியும். எடுத்துக் காட்டாக கேரட் சிம்பல். சிலவற்றை நாம் அமைக்க முடியாது. எடுத்துக்காட்டு, நாமாக அமைக்கும் பேஜ் பிரேக். இந்த சிக்கலைத் தீர்த்து நமக்கு உதவிட, வேர்ட் அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில், இந்த ஸ்பெஷல் கேரக்டர்கள் பட்டியலையே தந்துள்ளது.
முதலில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டம் பெறுங்கள். கண்ட்ரோல் + எப் அழுத்தினால் இது கிடைக்கும்.
இந்த கட்டத்தில் கீழே இருக்கும் கட்டங்களில் ஒன்றாக More  என்ற பட்டன் இருக்கும். அதனை அழுத்தவும். கீழாக Clipbrd மற்றும் Special  என்ற இரு கட்டங்கள் கிடைக்கும். இதில் Format  என்ற பட்டனை அழுத்த மேல் நோக்கி ஒரு கட்டம் விரிவடையும். இதில் அனைத்து ஸ்பெஷல் கேரக்டர்கள் மற்றும் பார்மட் வசதிகள் இருக்கும். இவற்றின் வகையைப் பார்த்தால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று நீங்கள் ஆச்சரிய மடைவீர்கள். இவற்றில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துத் தேடச் சொல்லலாம்.


கேள்வி: சிறுவர்களுக்குப் பயனுள்ள தளங்களின் முகவரிகளைக் கூறவும். வாரம் ஒன்று விளக்கமாகக் கூறவும்.
–கா. சிவப்பிரகாசம், பொள்ளாச்சி
பதில்: வாரம் ஒரு இணைய தளம் பகுதியில் அவ்வப்போது சிறுவர்களுக்கான தளங்கள் குறித்தும் எழுதுகிறோமே. இருப்பினும் உடனே நினைவிற்கு வரும் சில தளங்களின் முகவரிகளைத் தருகிறேன்.


www.creatingmusic.com


www.kidsclick.com


www.scivee.tv


http://familyfun.go.com/recipes/kids/


www.hoeworkspot.com


www.kids.gov.


www.starfall.com


குறிப்பிட்ட பொருள் குறித்து என்றால், ஏதேனும் சர்ச் இஞ்சின் மூலம் தேடிப் பார்த்து பயன் பெறுங்கள்.  பள்ளிக் கூடம் எல்லாம் திறந்தாச்சே. மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் தளங்களாக இருந்தால், ஓய்வு நேரம் முழுவதும், உங்கள் குழந்தைகள் இந்த தளங்களில் உட்கார்ந்து விடப் போகிறார்கள். கவனத்துடன் கண் காணிக்கவும்.


கேள்வி: டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கையில் முன் பகுதியில் எண்கள் தாமாக அமைக்கப்பட்டு டாகுமெண்ட் அமைத்தேன். பின் சில வரிகளுக்குப் பின்னால், வரிகளை அமைக்கும்போது, எண்களைக் கொடுத்தால், அது முந்தைய எண்களின் தொடர்ச்சியாக உள்ளது. என்ன செய்தாலும் மாற மறுக்கிறது. எப்படி இதனை மாற்றுவது?
–சி. கந்த செல்வன், பழநி
பதில்: இது ஒரு சிக்கலான சமாச்சாரம் தான். இதற்காக நாம் தானாக நம்பர் அமையும் வசதியை நிறுத்துவதும் கூடாது. புதிய எண் தொடங்க தீர்வும் உள்ளது. எந்த இடத்தில் மீண்டும் 1 லிருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த இடத்தில் எண்ணுக்கு அடுத்தபடியாகக் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். பின் விரியும் மெனுவில் Restart Numbering என்ற பிரிவில் கிளிக் செய்து மூடவும். இவ்வாறு பட்டியலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புதிய எண்ணைத் தொடங்கலாம்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X