அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2022
08:00

எஸ். ராமதாஸ், புதுவை: 'இந்திய திருநாட்டையே ஆளும் திறமை கொண்டவர் அன்புமணி ராமதாஸ்...' எனக் கூறியுள்ளாரே, பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி...
'கட்சி ஆரம்பித்து, 32 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியை தமிழகத்தில் பிடிக்க முடியவில்லையே...' எனப் புலம்பியுள்ளார், அன்புமணி... இவரிடம் எங்கிருக்கிறது இந்திய திருநாட்டை ஆளும் திறமை?

எம். நிர்மலா ராமதாஸ், விழுப்புரம்: 'தேசிய கல்விக் கொள்கை மூலம், மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் படிக்க முடியும்...' என்று, பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறாரே... இது, சாத்தியமா?

மருத்துவ கல்வி சாத்தியமே அல்ல! மருத்துவ புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்! தமிழறிஞர்கள் அத்தனை பேருக்கும் மருத்துவம் தெரியுமா? ஆங்கிலத்தில் இருந்து எப்படி மொழி மாற்றம் செய்வர்? மோடியின் சமாதான பேச்சு இது!

* தே. மாதவராஜ், கோவை: பஞ்சாப் அமைச்சர் கைது போல, பிற மாநிலங்களில், ஊழல் செய்யும் அமைச்சர்களை ஏன், கைது செய்யக் கூடாது?
அவசியம் கைது செய்ய வேண்டும்... அதேபோல் முதல்வர்களையும் விட்டு விடக்கூடாது!

ஆ. நவநீத கிருஷ்ணன், தென்காசி: என் மனசாட்சிபடி நடந்து கொள்வது எப்படி?
நீங்கள் எதைப் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்கிறீர்களோ, கருதுகிறீர்களோ, அப்படியே மாறுவீர்கள்!

எம். லிங்கேசன், புதுவை: சிலரது கண் பார்வை புண்ணாக இருக்கிறதே... அப்படி இல்லாதவர் கண் பற்றி...
எவர், எவருக்கு கருணை உள்ளம் உள்ளதோ அவரது கண்ணே கண்... அது இல்லாதோர் கண் தான் புண் எனக் கொள்ள வேண்டும்!

சி. கார்த்திகேயன், சாத்துார்: சசிகலாவின் ஆன்மிக சுற்றுப் பயணம் அவருக்கு பலன் தருமா?
தரலாம்... அவர், 'சேர்த்து' வைத்துள்ள பணத்தை பாதுகாக்க... ஆனால், அ.தி.மு.க.,வில் அவரால் ஒன்றும் செய்து விட முடியாது!

அ. செந்தில்குமார், சூலுார்: நீங்கள் விரும்பி சாப்பிடும் வெளிநாட்டு உணவு எது?
'தாய் காம்போ' என்ற தாய்லாந்து நாட்டு உணவு தான்! இதில், சைவத்தை தான், நான் சாப்பிடுவேன்... லென்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமே... இங்கிலாந்து பிரதமர் வீட்டு முகவரியுடன் சென்னையில் ஒரு, 'ரெஸ்டாரன்ட்' உண்டு... அதில் சாப்பிடுவோம்!

* சி.கொ.தி. முருகேசன், குன்னத்துார், திருப்பூர்: ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் வளரும் வாய்ப்பு உண்டா?
தமிழகத்தில், தமிழ் பேசும் பல கட்சிகளுக்கே வாய்ப்பு கிடைக்கவில்லை... இதில் ஹிந்தி பேசும் கட்சிக்கு இங்கு வாய்ப்பேது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
anthu - Mylapore,இந்தியா
08-ஜூன்-202212:07:25 IST Report Abuse
anthu ,,,,
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
06-ஜூன்-202201:27:50 IST Report Abuse
Manian 'எம். நிர்மலா ராமதாஸ், விழுப்புரம்': இதற்கு பதில் நடுத்தெரு நாரயண சார் மனது வைத்தால் கிடைக்கும். 1968ல் 2வது உலக தமிழ் மாநாட்டில், "தமிழ் ஒலி இலக்கணமும், செயற்கை தமிழ் பேச்சில் அதன் பங்கும்" என்ற கட்டுறை( An outline of a (Phonological Grammar of Tamil and It's Application to Speech Synthesis -2வது உலக தமிழ் மா நாடு கையேடு பக்கம் 368-377, International Association of Tamil Research, Madras-34) ,அந்த இலக்கணத்தில் இதற்கு வழி சொல்லப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் ஆத்தி சூடி. குறள், சிலப்பதிகார வரிகளை தமிழில் பேசியது. அரசியல் லாபம் இல்லாததால் இதுபற்றி அதிகாரிகள் யாரும் பேசுவதில்லை.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
06-ஜூன்-202201:10:15 IST Report Abuse
Manian 'எஸ். ராமதாஸ், புதுவை'பண்பாடு காரணமாக அந்து மணி சார் "ஏன் பூசல நாயனார் மனக்கோவில் கட்ட வில்லையா, அது போலவே இதுவும்" என்று ஏன் சொல்ல வில்லை என்றால், பூசலர் இறைவன் அடியை விரும்பினார், இவரும் இவர் கட்சியும் மரம் வெட்டியானால், இறைவன் எங்கே போய் நிழல் தேடுவார், என்பதற்கு பதில் என்ன சொல்ல எந்த மடாதிபதியும் இல்லையே அதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X