* மேஜை டிராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால், சிரமமின்றி திறந்து மூடலாம்
* பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊற வைத்து கழுவினால் அவை நன்றாக பளிச்சிடும்
* தரையைத் துடைக்கும் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி உப்பை போட்டு துடைக்க, ஈக்கள் பறந்தோடும்
* தேங்காயை சிறு துண்டுகளாக்கி, தயிரில் போட்டு வைத்தால், தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்கும்
* துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தையத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்
* பட்டுப் புடவையின் ஜரிகையை உள்புறமாக மடித்து வைத்தால், கறுத்துப் போகாமல் பாதுகாக்கலாம்.