அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2022
08:00

பா -கே

வெளிநாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் அவர்; லென்ஸ் மாமாவின் நண்பர். மாமல்லபுரம் சிற்பங்களை பார்க்க விரும்பி, சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.
'மணி... நீயும் கூட வாப்பா... அங்கிருக்கும் சிற்பங்களை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நீ வந்தாயானால், அதைப் பற்றி சொல்ல முடியும்...' என்று கூறி, என்னையும் அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா.
'அர்ஜுனன் தபஸ்' பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் நிரம்பி இருந்தனர். சிற்பங்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து, ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், வழிகாட்டியாக வந்தவரிடம், 'இவைகள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை...' எனக் கேட்டார்.

அவரிடம், 'ஏழாம் நுாற்றாண்டில், பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது...' என்று பதிலளித்தார்.
உடனே அந்த வெளிநாட்டு பயணி, 'பதினாறாம் நுாற்றாண்டில் உருவான தாஜ்மஹாலை காப்பாற்றத் தெரிந்த உங்களுக்கு, அதை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தைய இந்த வரலாற்றுச் சின்னத்தை இன்னும் சிறப்போடு பராமரிக்க தெரியவில்லையே...' என்று கூறினார்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார், வழிகாட்டி.
அப்பயணி கூறியதிலிருந்த உண்மை சுட்டது!புத்தக விமர்சன பகுதிக்காக வந்திருந்த புத்தகங்களை என், 'கேபினில்' அடுக்கி வைத்திருந்தனர். மேலாக இருந்த, 'சாதனை படைத்த பெண்மணிகள்' என்ற புத்தகம் கண்ணில் பட, எடுத்து புரட்டினேன்.
அதில் இருந்த ஒரு பகுதி இது:
அமெரிக்காவின், அலபாமா மாகாணத்தில் பிறந்தவள், அப்பெண்மணி. அவள் குழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட விஷ காய்ச்சலில் பேசும், கேட்கும், பார்க்கும் திறனை இழந்து விட்டாள்.
உண்ணும்போது திடீரென தட்டைத் துாக்கி எறிவாள். நாய் போல பல்லைக் காட்டியபடி பயங்கரமாக கூச்சலிடுவாள். கண்ணீரோடு அக்குழந்தையை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று முயற்சிகளை தொடர்ந்தனர், பெற்றோர்.
அச்சிறுமியை, மன நோயாளி என்று முத்திரை குத்தி, 'மன நல காப்பகத்தில் குழந்தையை விட்டு விடுவது தான் நல்லது...' என, பெற்றோருக்கு அறிவுரை தந்தனர், மருத்துவர்கள். ஆனால், தங்களது மகளை அப்படி எளிதில் விட்டு விட தயாராக இல்லாத பெற்றோர், அவளை புரிந்து கொண்டு, வளர்க்க பெரும் முயற்சிகளை தொடர்ந்தனர்.
அவளுக்கு பாடம் கற்பிக்க, ஒரு இளம் ஆசிரியை அமர்த்தப்பட்டார். வித்தியாசமான இந்த குழந்தைக்கு பாடம் கற்பிப்பது சவால் என்றாலும், அந்த ஆசிரியை முழு ஈடுபாட்டுடன் தன் முயற்சியை தொடர்ந்தார்.
ஒவ்வொரு நாளும் குழந்தையின் உள்ளங்கையில் எழுத்துக்களை எழுதி, உச்சரித்துக் காட்டினார், அந்த ஆசிரியை. அச்சிறுமி வழக்கம்போல கத்துவதும், விளையாடுவதுமாக தன் மனம் போன போக்கில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருந்தாள். தினமும், அந்த பிஞ்சுக் கரங்களில் எழுத்துக்களை அழுத்தி எழுதுவதை விடாமல் தொடர்ந்தார்.
ஒருநாள் ஆசிரியை, சிறுமியின் கையில் தண்ணீர் என்ற வார்த்தையை எழுதினார். அப்போது, சிறுமி, அதன் அர்த்தம் புரியாமல் தடுமாற, குழாயை திருப்பி சிறுமியின் மற்றொரு கையில் தண்ணீர் படும்படி வைத்தார், ஆசிரியை. ஏதோ ஒரு சிந்தனைப் பொறியை உணர்ந்தவளாக, வேகமாக அடுத்த பொருளை நோக்கி ஓடினாள், சிறுமி.
அந்த அறையிலிருந்த பல்வேறு பொருட்களை தொட்டவண்ணமாக ஆசிரியையிடம் வந்து, பெயரை எழுதுமாறு கேட்டாள். ஒவ்வொரு பொருளையும் தொடுவதும், அதன் பெயரை தன் கையில் எழுத சொல்லி ஒவ்வொன்றாக அறிய விரும்பினாள். இது, ஆசிரியைக்கு மகிழ்ச்சியைத் தந்தது; இச்சிறுமி நிச்சயம் படிப்பாள், பேசுவாள் என்ற நம்பிக்கை அவரிடம் ஏற்பட்டது.
ஆசிரியை வார்த்தைகளை உச்சரிக்கும்போது, அவரது உதடுகளை தொட்டுப் பார்த்து புரிந்து கொள்வாள். திக்கி, திக்கி வார்த்தைகளை உச்சரிக்கும் அளவுக்கு அந்த சிறுமி, முன்னேற்றம் அடைந்தாள்.
காலம் கடந்தது. வார்த்தைகள் தெளிவானது; சிந்தனை சக்தியும் வளர்ந்தது.
தன், 10வது வயதில், உலகின் புகழ்பெற்ற மனிதர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினாள், சிறுமி. அவர்களும், அவளுக்கு பதில் கடிதம் எழுதினர். நாளடைவில் கல்லுாரி சென்று பட்டமும் பெற்றாள். உலகமே போற்றும் பேச்சாளராக, எழுத்தாளராக பரிமளித்தாள்.
மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று சொல்லப்பட்ட சிறுமி, பின்னாளில், உலகமே அவளைப் பற்றி வாசிக்கும் அளவில் புகழ்பெற்றவளாகி விட்டாள்.
இவர் யார் தெரியுமா?
ஹெலன் கெல்லர் தான், அவர்.
இவரது வாழ்க்கை வரலாறு, புத்தகமாக பல மொழிகளில் வெளிவந்துள்ளது; திரைப்படமாகவும் எடுத்துள்ளனர்.
இந்தியா உட்பட உலகின், 39 நாடுகளில் பயணித்து, சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
- படித்து முடித்ததும், சாதனை புரிய, ஊனம் தடையல்ல என்பதை நிரூபித்த அப்பெண்ணை பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
மன நிம்மதி வேண்டி, சாமியார் ஒருவரைப் பார்த்து, 'வாழ்க்கை அமைதியா, சந்தோஷமா போகணும்... அதுக்கு நான் என்ன செய்யணும், சாமி...'ன்னு கேட்டார், ஒருவர்.
'உங்க மனைவியோட சமையலை புகழ்ந்து பாராட்டி இருக்கிறீங்களா?'ன்னு கேட்டார், சாமியார்.
'கல்யாணமாகி, இந்த, 20 வருஷத்தில, ஒருநாள் கூட அவ சமையலை புகழ்ந்து பாராட்டுனதில்லை...'ன்னு ரொம்ப மெதப்பா பதில் சொன்னார், இவர்.
'அடுத்த முறை சாப்பிடும் போது, மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்க...'ன்னு, 'அட்வைஸ்' செஞ்சு, அனுப்பி வைச்சார், சாமியார்.
வீட்டுக்குப் போனவருக்கு, சப்பாத்தியும், குருமாவும் பரிமாறினார், அவர் மனைவி.
அதை சாப்பிட்ட கணவரும், ரொம்ப குஷியாகி, சப்பாத்தி, குருமா இரண்டையும் ஒரேடியா புகழ்ந்து தள்ளிட்டாரு.
இந்த திடீர் புகழ்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்காத மனைவிக்கு, கோபம் வந்து விட்டது. கையில் இருந்த கரண்டியால் அவர் தலையில், 'டங் டங்' என்று அடிச்சுக்கிட்டே, '20 வருஷமா என் சமையலை புகழாத நீங்க, இன்னிக்கி பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும், குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோணிச்சு?'ன்னு கேட்டார்.
மயங்கி விழுந்தார், கணவர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X