வாழையில் இலைப்புள்ளி நோயால் அதன் வளர்ச்சி தடைபடும். ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு குலை சிறுத்து மகசூல் குறையும். பிஞ்சிலேயே காய் பழுத்து வீணாகிவிடும்.
காய்களின் நுனிப்பகுதியிலும் சில நேரம் கருகல் ஏற்படும். இது காற்றின் மூலம் பரவும் பூஞ்சாண நோய். வடிகால் வசதியில்லாத வாழைக்கு அடிக்கடி நீர் பாய்ச்சுவதாலும் நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. ரொபஸ்டா வாழை எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
தாக்குதலால் பாதித்த இலைகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். ஆரம்ப அறிகுறி தென்பட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் அல்லது ஒரு மில்லி புரோபிகோனசோல் கலந்து தெளிக்க வேண்டும்.
அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மாங்கோசெப் மருந்து கலந்து தெளிக்கலாம். தேவைப்பட்டால் 15 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் தெளிக்கலாம்.
மருந்து கரைசல் இலைகளில் படிவதற்காக சாண்டோவிட், பைட்டோவிட், ஹைவெட், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஏதாவது ஒன்றை அரை மில்லி அளவுக்கு தண்ணீர், மருந்து கரைசலுடன் சேர்க்க வேண்டும்.
வீரபுத்திரன், இணைப்பேராசிரியர்
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்துார்
விருதுநகர் மாவட்டம்