அலுவலகம் - எனக்காக ஒதுக்கப்பட்ட, 'கேபினில்' உள்ள கம்ப்யூட்டரில், 'இ-மெயிலில்' வரும் வாசகர்களின் கேள்விகளை, 'பிரின்ட்' எடுக்கவும், 'கூகுள்' தேடலில் சென்று, முக்கிய தகவல்களை எடுப்பதற்கும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி அளித்து வருகிறார், உதவி ஆசிரியை ஒருவர். டீ வாங்க, தபால்கள் எடுத்து வர உதவியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டார், பொறுப்பாசிரியர். இதற்காக வெளியில் செல்லும் நேரம் மிச்சமானதால், மேற்கூறிய பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.
இதெல்லாம், லென்ஸ் மாமாவுக்கு கடுப்பை ஏற்படுத்த, 'மணி... நீ இப்ப எல்லாம் என்னோடு நேரத்தை செலவிடுவதே இல்லை. வெளியே கூப்பிட்டாலும் வருவதில்லை...' என்று புலம்பினார். அவரை சமாதானப்படுத்தி, வேலையில் ஈடுபட்டேன். வழக்கம் போல், 'கூகுள்' தேடலில் நுழைந்து, பார்த்துக் கொண்டிருக்க, 'வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவின் இன்றைய நிலை என்ன?' என்ற தலைப்பில், ஆங்கில கட்டுரை ஒன்று தென்பட்டது. உதவி ஆசிரியை உதவியுடன் படிக்க ஆரம்பித்தேன். அதில்: கடந்த, 1980ல், புகழ்பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள், 'ஏற்கனவே, சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகி விட்டது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்...' என்று, தீர்க்கதரிசனமாக கூறியிருந்தனர். அதாவது, வீட்டில் சமைப்பதை நிறுத்தி, கடைகளில் வாங்கி சாப்பிடும் பழக்கம் வந்தபோது, மேற்கூறிய கருத்தை தெரிவித்திருந்தனர். அவர்கள் எச்சரித்தபடியே, இன்று, பொறுப்பும், பாங்கும் அற்ற அமெரிக்க குடும்ப கட்டமைப்பு அழிந்து விட்டன என்றே சொல்லலாம். அன்புடன் சமைப்பது என்றால், குடும்பத்தை இணைப்பது என்று அர்த்தம். குடும்ப கலாசாரத்தின் மையப்புள்ளியும் அதுவே. சமையல் அறை இல்லாமல், வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால், அது குடும்பம் அல்ல; தங்கும் விடுதி தான். சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன ஆனது தெரியுமா? கடந்த, 1971ல் கணவன் - மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள், 71 சதவீதமாக இருந்தன. 2020ல் அது, 20 சதவீதமாக நலிந்து விட்டது. அமெரிக்காவில், இன்று பெண்கள் மட்டும் தனித்திருக்கும் வீடுகள், 15 சதவீதம். ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள், 12 சதவீதம். 19 சதவீதம், அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகளானது. 6 சதவீதம் வீடுகள், ஆண் - பெண் சேர்ந்து வாழும் தங்குமிடங்களாயின. இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில், 41 சதவீதம், திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன. அதில் பாதி குழந்தைகள், பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு பிறந்தவை. இந்த அலங்கோலத்தால், 50 சதவீதம், முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. 67 சதவீதம், இரண்டாவது திருமணங்களும், 74 சதவீதம், மூன்றாவது திருமணங்களும் விவாகரத்தாகின்றன. எனவே, வெறும் படுக்கை அறை மட்டும், குடும்பம் அல்ல. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால், குடும்ப வாழ்வு நிலை குலைந்துவிடும் என்பதற்கு, அமெரிக்கா உதாரணமாகி விட்டது. * குடும்பங்கள் அழிந்தால், மனநலமும், உடல் நலமும் சீரழியும் * வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப் போகும் * ஏராளமான தொற்று வியாதிகள் வரும் * சேமிப்பு குறையும். எனவே, சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல. உடல் நலம், மன நலம், பொருளாதாரத்துக்கு கூட அவசியம். ஆதலால் தான், நம் முன்னோர், ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர். ஆனால், இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும், 'சுவிக்கி, செமோட்டோ, ஊபர் ஈட்ஸ்' போன்ற நிறுவனங்களில், 'ஆன்லைன் ஆர்டர்' செய்து சாப்பிடுவதும், மெத்தப் படித்த மற்றும் நடுத்தர மக்களிடமும் பல்கி பெருகியுள்ளது. இது, பேராபத்தில் முடியும். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, அந்த, 'ஆன்லைன்' நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. அமெரிக்கா நமக்கு பாடமாக அமைந்துள்ளது. அந்நிலை இங்கும் வராமல் இருக்க, நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். முன்பெல்லாம் யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும்போது, புளியோதரை மற்றும் தயிர் சாதம் கட்டி எடுத்து செல்வர். ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆகையால், வீட்டிலேயே சமையல் செய்யுங்கள். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள். காலையில், எறும்புக்கும், பகலில், காக்கைக்கும், இரவில் நாய்க்கும் உணவிடுங்கள். குடும்பமாய் இருங்கள்; ஒற்றுமையாய் வாழுங்கள்! - இப்படி சென்றது அக்கட்டுரை.
நான் என்ன படிக்கிறேன் என்று எட்டிப் பார்த்த லென்ஸ் மாமா, 'கால மாற்றத்தில் இதெல்லாம் நடப்பது சகஜம் தான். இன்னொரு, 'வெப் - சைட்'டில் நான் படித்ததை சொல்கிறேன் கேளு...' என்று கூற ஆரம்பித்தார்: எதை சாப்பிட விரும்புகிறீர்களோ, அதை வாங்கி சாப்பிட்டு விடுங்கள். ஏனெனில், * உடற்பயிற்சி செய்யும், 'டிரெட்மில்'லை கண்டுபிடித்தவர், 54 வயதில் இறந்தார் * 'ஜிம்னாஸ்டிக்ஸ்' பயிற்சியை அறிமுகப்படுத்தியவர், 57வது வயதில் இறந்தார் * உலகின் சிறந்த கால் பந்தாட்ட வீரரான மரடோனா, 60வது வயதில் இறந்தார். ஆனால்... * கே.எப்.சி., எனப்படும் 'கென்டகி பிரைட் சிக்கன்' செய்முறையை உருவாக்கிய, ஹார்லேண்ட் சாண்டர்ஸ், 94 வயதில் இறந்தார் * பிரபல, 'வின்ஸ்டன்' சிகரெட் தயாரிப்பாளரான ரிச்சர்ட் ஜோஷ்வா ரெனால்ட்ஸ், 70வது வயதில் தான் இறந்தார் * 'ஹென்னெஸி' என்ற பெயரில், உலக புகழ்பெற்ற பிராந்தியை அறிமுகப்படுத்திய, ரிச்சர்ட் ஹென்னெஸி, 76வது வயதில் இறந்தார் * நம்மூர் தயாரிப்பான, எம்.டி.எச்., என்ற மசாலா பொருள் தயாரிப்பாளரான தரம்பால் குலாட்டி, 97 ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தார். - என, கூறி முடித்தார். 'எல்லாம் சரிதான் மாமா... இந்த உணவு வகைகளையும், மசாலா பொருட்களையும் தயாரித்தவர்கள், தாங்களும் அதை சாப்பிட்டு இருப்பரா அல்லது வியாபாரத்துக்கு மட்டுமே தயாரித்திருக்கலாம் அல்லவா...' என்றார், அருகிலிருந்த உ.ஆ., 'வியாபாரத்துக்காக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தாலும், 'டேஸ்ட்' பார்க்காமல் இந்த அளவுக்கு வெற்றிகரமாக விருத்தி செய்து இருக்க முடியாது அம்மணி...' என்றார், மாமா. எத்தனை சமாதானம் சொன்னாலும் அமெரிக்காவின் நிலை இங்கு வந்துவிடுமோ என்று கவலை ஏற்பட்டது எனக்கு. வாசகர்களே... உங்கள் கருத்து என்ன? எனக்கு எழுதுங்களேன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
ஒற்றை வாழ்க்கையை மக்கள் விரும்புகாரணம் படிப்பு, நல்ல சம்பளம், செலவழிக்க சுதந்திரம் தான். நாள் முழுதும் வாங்கும் சம்பளத்துக்கு அதிகமாகத்தான் உழைக்க வேண்டியுள்ளது. எந்த நிமிஷம் 'உடனே கிளம்பி வா' என்று உதவு வருமோ என்ற நிலையில் ஆற அமர சமைக்க நேரம் இன்றி இதற்காகவே உள்ள நிறுவனங்களை நம்ப வேண்டியுள்ளது இருவரும் சம்பாதித்தால் வேலைப்பளு இருவருக்குமே இருக்கும், வேலைகளைப் பகிராமல் நீயா நானா என்று போட்டி பலனாக வெறுப்பு, விரக்தி, 'நீயில்லாமல் வாழ முடியாதா/' என்று பிரிவு, இதுதான் நிதர்சனம் இங்கும். இன்னும் அமேரிக்கா நிலையை எட்டவில்லையே தவிர, அந்நாட்கள் அதிக தூரம் இல்லை
உண்மைதான். உடல் நலம் கெட்டபின் இதுபற்றி பேசமுடியுமா? திருமணமாகுமுன் இது பற்றி ஏன் பேசுவதில்லை? வயதானவர்கள் இல்லத்தில் காய்கறிகளை வெட்டச் சொல்லலாமே. பதிலுக்கு அவர்களுக்கும் ஏதாவது உதவி செய்யலாமே இரவில் பேசிக்கோண்டே மறுநாள் பாதி சமயலுக்கு தயார் செய்யலாமே பிரிஜ், மைக்ரோ வேவ் அவன் உள்ளவர்களாவது இதைச் செய்யலாமே நேரமே இல்லை என்பது பொய் .திட்டமிடல் இல்லை என்பதே உண்மை. உதாரணமாக, தேங்காய், சீலகம், உப்பு, சிறிது அரிசிமா கலந்து மிக்சியிலு அரைத்த விழுதை வதக்கி பிரிஜ்ஜில் வைக்லாம். ஒரு நாள் நீளக்காய்களை வெந்து அதில் பச்சை மிளகாய் விழுது, சிறிஉ புளி தயிரு சேர்த்து ஒரு கொதி, சிறிது கருவேப்பிலை கொத்துமல்லி 1ஸ்பூன் நெய் -அவியல் ரெடி. இன்னோரு நாள் பாசிப்பருப்பு, மிளகு, சிறிய சைஸ் காய்கறிகளை வெந்து அதே தேங்காய் வதக்கல், தாளிப்பு- மிளகு கூட்டான் ரெடி. மனம் இருந்தால் ஆரோக்கியம், இல்லை என்றால் ஆசுபத்திரியே எல்லோரும் ஐடியில் வேலை பார்கவில்லையே...
நல்ல கேள்வியே. நீண்ட பட்டியல் உள்ளது. சுருக்கமாக:
1. எண்ணைகள் பல தடவை சூடு செய்து அங்கே பொரிக்கிறார்கள். அந்த எண்ணையில் ( rancid - காரல் ) என்ற வேதிப்பொருள் உண்டாகுகிறது. அதன் பலன் சரியாக வடிகட்டி, குளர் சாதனப் பெட்டியில் வைக்காததால் அந்த எண்ணையில் உள்ள உணவு துகள்களை உண்டு, க்ளோஸ்டியம் பொடூலினம் (Clostridium botulinum) பாக்டீரியா உருவாகி . , உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அந்த எண்ணையில் (contains free radicals, molecules that can damage cells and lead to increased cancer risk ) சுதந்திர புரட்சி நுண்ரசாயனம் செல்களை உடைத்து கேன்சரை உண்டாக்கும். வெகு சிலருக்கே மரபணு பாதுகாப்பு இருக்கும். கேசரியில் இந்த பலதடவை சுட்ட எண்ணையை உபயோகிப்பார்கள் என்று 40 வருட அனுபவம் உள்ள ஹோட்டல் மாஸ்டர் சொல்கிறார். நண்பருக்கு பெண் பார்க்க போன இடத்தில் முதல் வாய் கேசரி தின்று தவித்தது ஏன் என்று அவர்தான் விளக்கினார்.
2. எண்ணை சூடுபடுத்தினால் புகை வரும், சுத்திகரித்த எண்ணைகள் கடலை, சோயா, சூரிய காந்தி முறையே 440, 495, 510 டிகிரி பாஃரன்ஹீட்டில் புகையும். மறுசுர்ச்சியில் அது 375 டிகிரிக்கு கீழ் போனால் ஆபத்து. எந்த ரெஸ்டாரண்டிலேயாவது இடதுஐத் கையில் தெர்மாமீட்டர் கொதிக்கும் எண்ணையில் , ஜாரணி வைத்துள்ள மாஸ்டர்களை பார்த்திருப்பீர்களா?
வடை, போண்டா போன்றவையில் உள்ள ஈரப்பதம் எண்ணையில் மூலக்கூறுகளை மாற்றிவிடும் (அப்பளம், வடாகம் ஆபத்தில்லை).
3. காய்கறிகள் நல்ல தண்ணீர் விளைந்ததா, இல்லை பாதரசம், குரோமியம், ஆர்சனிக் போன்ற நீரில் விளைந்தா என்றெல்லாம் உணவகங்கள், பொதுவாக( சாதாரண) ரெஸ்டாரெண்டுகள், சுவிக்கி, செமோட்டோ, ஊபர் ஈட்ஸ்' போன்ற நிறுவனங்களில், 'ஆன்லைன் ஆர்டர்' கம்பனிகளால் குறைந்த விலை உணவுகளில் கவனம் செலுத்த முடியாது. ஆகவே, ஏராளமான மருத்து பில்கள், நீண்டகால உடல் குறைகள் அவற்றில் மறைந்திருக்கின்றன.
4. சமைக்கும் தண்ணீர், அதன் மூலம் பரவும் வியாதிகளை தவிர்க முடியாது.
5. தரையில் விழுந்த உணவுகளை தூக்கி எரிவதில்லை. ஆக உணவு தரையில் விழந்ததா என்பதை கண்டுபிடிக்க முடியாது. அதை பரிசோதிக் ஒவ்வொருவரும் வீட்டில் மைக்குரோஸ்கோப் வைத்திரு்கவேண்டும். அவர்களுக்கு இருப்பது போல் நமக்கும் உண்மையான விஞ்ஞான அறிவுள்ள வக்கீலாக நீங்கள் இருந்தால் மட்டுமே உணவு தரம் பற்றி புகார் செய்ய முடியும்.
6. குறைந்த ஊதிய்கோபத்தால் உணவில் எச்சில் துப்புதல், சிறிது எடுத்து உண்ணுதல், ஊச்சா போதல் அமெரிக்காவில் கண்டுள்ளார்கள். இங்கே அறிவு ஜீவிகள் டெலிவரி ஆட்கள் அப்படி இல்லை என்ற உத்திரவாதம் இல்லை. அது உங்கள் நீங்க லஞ்சவாதிகளா இல்லையா என்ற அதிர்ஷ்டத்தை பொருத்தது. ஆகவே "அரசன் அன்று கொல்வான் ஹோட்டல்கள் நின்றே கொல்லும்" என்பதே உண்மை. சுமார் 20% விதிவிலக்கு உண்டு, அது உங்களுக்கு வாய்குமா என்பது உங்கள் தலைவிதியில் உள்ளது. ஆக வீட்டு சமயலே விதியை மாற்றும். குறைந்த விலையும் அதிக குணமும் உள்ள உணவுகளே பொதுவாக, கிடையாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.