கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2011
00:00

கேள்வி: இணையத்தில் படம் ஒன்றை சேவ் செய்கையில், விண்டோஸ் அதனை பி.எம்.பி. பைலாக சேவ் செய்கிறது. இதனை ஜேபெக் பைலாக சேவ் செய்திட என்ன செய்ய வேண்டும்?
-சி. கிருத்திகா, சென்னை.
பதில்: இணைய தளத்தை உருவாக்குபவர்கள், படங்களின் தரம் குறையாமல் காட்டப்பட, அதனை பி.எம்.பி. பைலாகவே பதிக்கிறார்கள். நீங்கள் அதனை சேவ் செய்திடுகையில் பி.எம்.பி. பைலாக விண்டோஸ் சேவ் செய்திடும். ஆனால், நீங்கள் விரும்பினால், அதனை ஜேபெக் அல்லது வேறு பார்மட்டிற்கு மாற்றி சேவ் செய்திடலாம். சேவ் செய்ய வேண்டிய படம் மீது ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் மெனு வழியாக சேவ் அஸ் என்ற பிரிவில் கிளிக் செய்யவும். அல்லது படத்தைக் காப்பி செய்திடவும். இனி நீங்கள் விரும்பும் பெயிண்ட் போன்ற புரோகிராமை இயக்கி, அதில் பேஸ்ட் செய்திடவும். அப்போது சேவ் செய்தால், உங்களிடம் ஆப்ஷன் கேட்கப்படும். அதில் கொடுத்துள்ள பார்மட்டில் எதனை வேண்டு மென்றாலும், தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம்.

கேள்வி: என் தந்தையின் லேப் டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத் தில், ஆன்லைன் கேம்ஸ் விளையாடினேன். முடித்தவுடன், டாஸ்க் பார் அதன் வழக்கமான கலரில் இல்லை. மேலும் ஸ்பீக்கர் ஐகானில், எக்ஸ் மார்க் அடையாளம் இருந்தது. மீண்டும் ரீ பூட் செய்தபோது அந்த ஐகானே இல்லை. என்ன நடந்திருக்கும்? மீண்டும் ஐகானை எப்படிக் கொண்டு வருவது?
-கட்டாயப் பதில் கேட்டுள்ள பெயர் தராத வாசகி, புதுச்சேரி.
பதில்: சில கேம்ஸ் தொடங்குகையில், அவசரத்தில், கேட்கும் கேள்விகளுக்கு யெஸ், யெஸ் அல்லது அக்செப்ட் என பதில் தந்திருப்பீர்கள். அல்லது நீங்கள் வேறு ஒன்றை செட் செய்கையில் இந்த செட்டிங்ஸ் மாறும் வகையில் செயல் பட்டிருப்பீர்கள். கவலைப் பட வேண்டாம்.
கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு Sounds and Audio Devices என்ற ஐகான் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால், அதே பெயரில் விண்டோ கிடைக்கும். விண்டோவின் நடுவே Mute என்று உள்ளதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். அதன் கீழாக, Place Volume Icon in the Task Bar என்று இருக்கும். இதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திப் பின்னர் Apply, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளி யேறவும். ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவது அவ்வளவு உகந்ததல்ல. ஏதேனும் வைரஸ் மற்றும் மால்வேர், உங்கள் அனுமதியின்றி கம்ப்யூட்டரில் இறங்க வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி: ரூட்கிட் என்பது ஒரு மால்வேர் புரோகிராமா? வைரஸா? விளக்கவும்.
-சா. முத்துசாமி, மதுரை.
பதில்: மால்வேர் மற்றும் வைரஸைக் காட்டிலும் மிகவும் மோசமானது. நாசகார விளைவு களைத்தரக் கூடியது ரூட்கிட்.
ரூட்கிட் என்பது பல டூல்ஸ் அடங்கிய ஒரு செட். கம்ப்யூட்டர் பயன்படுத்து பவருக்குத் தெரியாமல், கம்ப்யூட்டரில் பதியப்பட்டு, கம்ப்யூட்டரின் அட்மினி ஸ்ட்ரேட்டருக் குண்டான அனைத்து உரிமையையும், அதனை ரிமோட்டில் இயக்குபவருக்குத் தரும். விண்டோஸ், லினக்ஸ், யூனிக்ஸ், ஏன் மேக் சிஸ்டத்தில் கூட இவை இயங்கி, கம்ப்யூட்டரைக் கைப்பற்றும். தன்னை ஏவியவருக்கு முழு உரிமையத் தரும் பின் வாசலைத் திறந்து வைக்கும்.

கேள்வி: Defraggler என்று ஒரு புரோகிராம் உள்ளதா? டிபிராக் செய்திடக் கூடிய புரோகிராமிலிருந்து இது வேறுபட்டதா? வேறு செயலுக்கு உதவிடுமா?
-க. நீலகண்டன், கோவை.
பதில்: டிபிராக்ளர் குறித்து நீங்கள் சந்தேகப் படுவது ஓரளவிற்குச் சரியே. இதுவும் டிபிராக் செய்திடும் புரோகிராம் தான். வேறு செயலை மேற்கொள்ளாது. இதன் சிறப்பு என்னவெனில், இதனைப் பயன்படுத்தி, ஒரு குறிபிட்ட பைலைக் கூட தனியாக டிபிராக் செய்து, ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்து இருக்கும்படி அமைத் திடலாம். இதன் இன்னொரு சிறப்பு, இது மிகவும் சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம் ஆகும். ஒரு சிறிய .exe பைலாக இது கிடைக்கிறது.
சிகிளீனர் தந்த பிரிபார்ம் (Piriform) என்னும் நிறுவனம், இதனையும் தயாரித்து இலவசமாக வழங்குகிறது. இதனைப் பெற http://www.defraggler.com/ download என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். டிபிராக்ளர், விண்டோஸ் 200, 2003, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இயங்குகிறது.

கேள்வி: நான் இரண்டு வாரங்களாக, குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்குகிறது. திடீரென புக்மார்க்ஸ் பார் மறைந்துவிட்டது. இதனை எப்படி திரும்பக் கொண்டு வருவது?
-ஆ. சிவப்பிரகாஷ், கோவை.
பதில்: இது போல நாம் பழகிய சாதனங்களை மாற்றுகிற போது சில விஷயங்கள் நமக்கு நன்றாகத் தெரிந்த மாதிரி இருந்தாலும், மறந்த மாதிரியே தெரியும். குரோம் பிரவுசரில், வலது மேல் புறத்தில் உள்ள பைப் ரிஞ்ச் சாதன ஐகான் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Tools தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக. இப்போது மேலாக உள்ள Always show Bookmarks Bar என்பதில் கிளிக் செய்து தேந்தெடுக்கவும். அல்லது Ctrl+Shift+B அழுத்தவும். இனி புக்மார்க்ஸ் பார் திரையில் கிடைக்கும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் ஸ்பெல் செக் டூலை எப்படி இயக்கி பயன்படுத்துவது?
-க.ஷீலா ப்ரகாஷ், திருப்பூர்.
பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்கையில், மாறா நிலையில் ஸ்பெல் செக்கரும் இயக்கப்பட்டிருக்குமே. வேறு ஏதேனும் செட்டிங்ஸ் அமைக்கையில் மாற்றி விட்டீர்களா? முதலில் Tools>Options> Advanced எனச் செல்லவும். கிடைக்கும் விண்டோவில் “General” டேப் தேர்ந்தெடுப் பதனை உறுதி செய்து கொள்ளவும். இந்த விண்டோவில் “Check my Spelling as I Type” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், ஸ்பெல் செக்கர் இயங்கும். இதனை மாற்றாதவரை ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ளப்படும்.

கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் பார்முலாவில் எப்படி கமெண்ட் இணைப்பது? இது குறித்து தாங்கள் எழுதவே இல்லையே!
-சா. தினேஷ் குமார், திண்டுக்கல்.
பதில்: இப்போது வேண்டுமானாலும் அது குறித்து தகவல் தருகிறேன். ஆனால் எழுதவே இல்லை என்று சொல்ல வேண்டாம். எக்ஸெல்லில் கொடுக்கப் பட்டுள்ள பார்முலாவில் கமெண்ட் அமைத்திட பார்முலா முடிவில் +அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். அடுத்து N என்று டைப் செய்து பின் அடைப்புக் குறிக்குள் தேவைப்படும் செய்தியை டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக பார்முலாவுடன் கமெண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
=CurrentAssets / CurrentLiabilities+ N(“The formula returns Current Ratio”)

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸை என் நண்பர் மவுஸால் கிளிக் செய்து உடன் திறக்கிறார். மெனு செல்லாமல் இது எப்படி சாத்தியமாகிறது?
-இ. உத்தமச் சோழன், நரசிங்கம்.
பதில்: இதில் ஒன்றும் மந்திரம் இல்லை. பேஜ் செட் அப் விண்டோ பெற, பைல் மெனு அழுத்தி அதில் பேஜ் செட் அப் பிரிவில் என்டர் தட்டிப் பெறுவது ஒரு வழி. இன்னொரு எளிய வழி உங்கள் நண்பர் கையாள்வது. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். இரண்டு பக்கமும், அதாவது மேலாகவும், இடது பக்கமும் ரூலர் இருக்க வேண்டும். இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று, இருமுறை கிளிக் செய்திடுங்கள். உடன் பேஜ் செட் அப் விண்டோ கிடைக்கும்.
இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மேலாக படுக்கை வசத்தில் உள்ள ரூலரில் ஒரு முறை கிளிக் செய்தால் அங்கு ஒரு டேப் ஸ்டாப் அமையும். எனவே மவுஸை இருமுறை வேகமாக கிளிக் செய்தால் தான் இங்கு பேஜ் செட் அப் கிடைக்கும். அப்படி முடியாதவர்கள் ரூலர் முடிந்து ரூலராகப் பயன்படுத்த முடியாத இடம் வலது கோடியில் இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் கிளிக் செய்திடலாம். இடது புறம் உள்ள ரூலரில் இந்த பிரச்னை இல்லை. அங்கு கிளிக் செய்தால் உடனே எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேஜ் செட் அப் கிடைக்கிறது.

கேள்வி: எனக்கு அனுப்பப்பட்ட எக்ஸெல் பைலில், ஒர்க்ஷீட்டில் உள்ள செல்களில், அதன் கோடுகள், மென்மையாக வழக்கம்போல் இல்லாமல், வண்ணத்தில் உள்ளன. இதனை எப்படி அமைப்பது?செட்டிங்ஸ் வழி என்ன?
-டி.கே. ஹம்சா மணி, காரைக்கால்.
பதில்: எக்ஸெல் ஒர்க் புக்கில் உள்ள செல்களுக்கான கிரிட் லைன் எப்போதும் மென்மையான கருப்பு வண்ணத்தில் இருக்கும். இந்த வண்ணத்தை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றலாம். முதலில் Tools கிளிக் செய்து Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த பாக்ஸில் உள்ள View டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது கடைசியாகக் கீழாக உள்ள Window Optinos என்னும் பகுதியில் மூன்றாவதாக Grid Lines என்னும் பிரிவில் டிக் அடையாளத்தை ஏறபடுத்தவும். பின் Grid Lines Color என்னும் பகுதியின் அருகே வண்ணங்கள் உள்ள கட்டம் ஒன்று காட்டப்படும். இங்கு உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களில் சில பார்மட்டிங் (சாய்வு, அழுத்தமாக, கோட்டுடன் என) மேற்கொள்கிறோம். இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமாயின், ஒவ்வொரு சொல்லாக, ஒவ்வொரு பார்மட்டாகச் செல்ல வேண்டியுள்ளது. சுருக்கு வழிகள் உள்ளனவா?
-டி.முகேஷ் ராஜ், சின்னமனூர்.
பதில்: நீங்கள் குறிப்பிடும் பார்மட்டிங் வகைகளை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், அவற்றைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்யலாம். நீங்கள் கேட்பது போல, இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளையும் பயன்படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் உள்ளாக Reset Char என்ற கட்டளையை அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
katheebjalal - chennai,இந்தியா
11-ஜூலை-201110:02:32 IST Report Abuse
katheebjalal Facebook இல் தமிழில் டைப் செய்வது எப்படி என்று விளக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X