இலைவாழையில் எக்கச்சக்க லாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2022
08:00

திருச்சி, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் வாழை சாகுபடியில் முதல் பயிர் பழத்திற்காகவும், மறுதாம்பு இலைக்காகவும் பயன்படுகிறது. கோவை, திருச்சி, தஞ்சாவூர், வேலுார், திருவண்ணாமலையில் பழத்திற்காக மட்டும் பயிரிடப்படுகிறது. முதல் பயிர் முழுமையாக அறுவடை செய்யும் வரை பக்க கன்றுகளில் வளரும் இலைகளை விற்று வருமானத்தை பெருக்கலாம்.

பூவன் (மஞ்சள் வாழை) தான் இலைக்காகவே பயிரிடப்படும் ரகங்களில் 70 சதவீத பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. பூவன் ரகத்தில் இலைகள் மென்மையாகவும் எளிதில் கிழியாததாகவும் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்ல ஏற்றதாகவும் உள்ளது.

கற்பூரவல்லி, மொந்தன் ரகங்கள் தலா 15 சதவீத பரப்பளவில் இலைக்காக சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல வடிகால் வசதியுள்ள மணல், வண்டல், குறுமண் கலந்த நிலங்கள் வாழை பயிரிட ஏற்றது. தோட்டக்கால் நிலங்களில் மார்கழி, தை பட்டமும் (டிச., ஜன.), ஆனி, ஆடி பட்டமும் (ஜூலை, ஆக.,) வாழை நடும் சிறந்த பருவங்கள்.

பழத்திற்கான சாகுபடி எனில் 7க்கு 7 அடி இடைவெளியில் 888 கன்றுகளும் இலைக்காக எனில் 4.5க்கு 4.5 அடி இடைவெளிக்கு 2150 கன்றுகள் ஒரு ஏக்கருக்கு தேவை. நடவிற்கு மூன்று மாத வயதுள்ள ஈட்டி இலைக்கன்றுகளே சிறந்தவை.

கன்றுகளை நடுவதற்கு முன்பு வேர்களை நீக்கி கிழங்கின் மேல் உள்ள அழுகிய, நூற்புழுவின் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகள் இருந்தால் நீக்கிவிட வேண்டும். நூற்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த கன்றின் கிழங்குகளை களிமண் குழம்பில் நனைத்து 40 கிராம் கார்போபியூரான் குருணை மருந்து இட்டு நட வேண்டும். வாழையின் முன் வளர்ச்சி பருவத்தில் கிழங்கு கூன் வண்டுகள் மற்றும் முடிகொத்து நோயை பரப்பும் அசுவினியை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு 3கிலோ வரை பயன்படுத்தலாம்.

நடவு செய்த 6 மாதங்கள் வரை இலைகளை பறிக்கக்கூடாது. அதன் பின் தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் இலைகளை அறுவடை செய்யலாம். பருவகாலத்தை பொறுத்து ஒரு இலை உற்பத்தியாவதற்கு 7 முதல் 15 நாட்களாகும். பூவன் ரகத்தில் மரம் ஒன்றில் 32 முதல் 36 இலைகள் 8 முதல் 9 மாதங்களில் உற்பத்தியாகிறது. ஒரு ரூபாய் செலவு செய்தால் ரூ.3.5 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இளங்கோவன்
வேளாண்மை இணை இயக்குனர்
காஞ்சிபுரம்
98420 07125

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X