'களிமண் நகைகளை என்னவிதமாய் வித்தியாசப்படுத்த முடியும்?'
தீவிரமாய் யோசித்திருக்கிறார் கோவை துடியலுாரைச் சேர்ந்த 22 வயது ஸ்மிரிதி சிவக்குமார்.
முயற்சிகள்
'உலோக ஆபரணங்களில் மட்டுமே பதிக்கப்படும் கெம்ப் கற்கள், குந்தன் கற்களை களிமண் நகைகளில் பதித்தேன். விசேஷ நாட்களுக்கான அணிகலன் தொகுப்பு, கண்கவர் வண்ணங்களில் கார்ட்டூன்/ மீன் உருவ பென்டன்ட் இணைத்த கழுத்தணி, காதணி தயாரித்து வித்தியாசம் காட்டினேன்.
'தம்பதியரின் புகைப்பட அடிப்படையில் களிமண்ணில் நான் உருவாக்கிய 8 செ.மீ., அளவிலான கேரிகேச்சருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது; இதன் பின்னணியில் காந்தம் பொருத்தப்படுவதால் விரும்பும் இடங்களில் ஒட்டி அழகு பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு! இவற்றோடு, களிமண் வால் ஹேங்கிங்கும், வசீகர பிரேஸ்லெட்டும் தயாரித்து தருகிறேன்.
'இணையவழியில் உலகம் முழுக்க என் படைப்புகளை கொண்டு சேர்க்கிறேன். என்னிடம் 200க்கும் மேலான பெண்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர். 'அழகை நேசிக்கும் அத்தனை பெண்களையும் களிமண் அணிகலன் நோக்கி திருப்ப வேண்டும்' என்பது என் இலக்கு!'
சபாஷ் ஸ்மிரிதி!
சிறப்பு பொருள்: மணமகள் அலங்கார களிமண் ஆபரணங்கள் ரூ.7,000 முதல்
96261 95959