தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
மாற்றுத்திறனாளிகள் நலன் சம்பந்தமா நீங்க பேசுறதை எல்லாம் 'உண்மை'ன்னு என்னால ஏத்துக்க முடியலை! ஏன்னா, 'போலியோ'வால கால்கள் பாதித்த என் மாற்றுத்திறனாளி சகோதரர் வாழ்க்கையில, உங்க ஆட்சியிலேயும் நல்லது நடக்கலை!
விபத்துல வலது கையை இழந்த மாற்றுத்திறனாளி மனைவியையும், மூளை வளர்ச்சி குன்றிய 22 வயது மகனையும் பராமரிக்க பொருளாதாரம் போதாம, குடும்பத்தை பிரிஞ்சு என் தம்பி என் ஆதரவுல இருக்குறான். பெருங்களத்துார், பழைய ஜி.எஸ்.டி., சாலை சர்வீஸ் பாதையில அம்மன் கோவில் அரச மரத்தடியில 'பஞ்சர்' கடை போட்டிருக்கான்.
அவனோட மாற்றுத்திறனாளி பாஸ்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் 2015ம் ஆண்டு வெள்ளத்துல போயிருச்சு. அதுக்கப்புறம், உதவித்தொகை வர்றதும் நின்னு போயிருச்சு! தாம்பரம் தாலுகா ஆபிஸ், இரும்புலியூர் வி.ஏ.ஓ., ஆபிஸுக்கு அவன்கூட அலையுறப்போதான், 'அதிகாரிகள் மனசுல ஈரம் இல்லை'ன்னு புரிஞ்சது; அலையுறதை நிறுத்திட்டோம்.
ஏதோ... 'மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு முனைப்புடன் செயல்படுகிறது'ன்னு நீங்க அடிக்கடி பேசுறதை கேட்குறதால, என் சகோதரர் கஷ்டத்தையும் உங்ககிட்டே சொல்லணும்னு தோணுச்சு; அவ்வளவுதான்; நீங்க நல்லா இருக்கணும்யா!
- 50 வயது சகோதரர் பரமசிவத்திற்கு நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரும் சகோதரி மங்கலட்சுமி, செங்கல்பட்டு.