ஒரே அறை
காந்திஜியின் கன்னத்தில்
முப்பது கோடி பேருக்கு
வலித்தது...
சுதந்திரம் மலர்ந்தது!
நீயும் எழுது
சிந்தனை சிற்பியே
ஒரு குடிமகன்
குடியை மறந்தால்
அதுவே உன் வெற்றி!
உடலாலும், மனதாலும்
புண்படும் மாதர் நிலை
உயர
நீயும் எழுது
படிப்போரின்
விழியோரம் நீர்
கசிந்தால்
அதுவே உன் வெற்றி!
படித்த இளைஞனின்
கண்ணீரை விலை பேசும்
அரசியல்வாதியின்
நாடி தளர
நீயும் எழுது
ஏழை இளைஞனுக்கு
எளிதில் வேலை கிடைத்தால்
அதுவே உன் வெற்றி!
இரவில் எரியும்
ஒற்றை தீபம்
ஊருக்கே வழி காட்டும்
நீயும் எழுது
ஒற்றை ஆளாய்
லஞ்சம் ஒழியும்
அதிகார மமதை அகன்றால்
அதுவே உன் வெற்றி!
கொட்டிய மழையில்
குப்பை மேடு கரைந்தது
சுயநலம் நீங்கி
பொதுநலம் நாட
நீயும் எழுது
பொறாமை குணம்
முழுதும் பொசுங்கினால்
அதுவே உன் வெற்றி!
மெழுகாய் உருகி
வார்த்தை ஒளி வீசினால்
இளைஞன் மீண்டெழுவான்
நீயும் எழுது
மண் வாசம் வீசட்டும்
போதை உலகம் தெளிந்தால்
அதுவே உன் வெற்றி!
பாரதி சேகர், சென்னை.