பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது, பழங்காலத்து பழமொழி. இதை பொய்யாக்கி, பாம்பு வாங்க படையெடுத்து வரும் மக்களை, தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவில் காணலாம்.
இங்கு, லம்போக்கு என்ற ஊரில் இருக்கும் டொமோஹான் மார்க்கெட்டுக்கு தான், பாம்பு பிரியர்கள் படையெடுக்கின்றனர். விதவிதமான உயிருள்ள பாம்புகள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பாம்புகளை தேர்வு செய்து கொடுத்தால், உடனே அதை வெட்டி சுத்தப்படுத்தி கொடுப்பர். பாம்பு இறைச்சி மிகவும் ருசியாக இருப்பதாக, பாம்புக்கறி பிரியர்கள் நாக்கை சப்புக்கொட்டியபடி கூறுகின்றனர்.
ஜோல்னாபையன்