'பிளாபங்கட்' நிறுவனம், புதிதாக, 75 அங்குல டிவியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 50,55,65 அங்குல அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 75 அங்குல டிவி அறிமுகம் ஆகியுள்ளது.
இது ஒரு 4கே க்யூ.எல்.இ.டி., டிவியாகும். டால்பி விஷன், எச்.டி.ஆர்., 10பிளஸ், எச்.எல்.ஜி., பார்மெட் ஆகியவற்றை சப்போர்ட் செய்யக்கூடிய டிவியாகும். ஏர் ஸ்லிம் டிசைனுடன், பேஸல் லெஸ் ஸ்கிரீன் மற்றும் அலாய் ஸ்டாண்டு ஆகியவற்றுடன் வந்துள்ளது.
மேலும், 60 வாட் அவுட்புட் உடன் கூடிய, நான்கு ஸ்பீக்கர்களும் உள்ளன. டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டி.டி.எஸ்., சைபர்சவுண்டு ஜென் 2 ஆகிய ஆடியோ வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 2 ஜி.பி., ரேம் மற்றும் 32 ஜி.பி., ஆன்போர்டு ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு டிவி 10 ஓ.எஸ்., மென்பொருளில் செயல்படுகிறது.
வைபை புளூடூத் 5.0 இணைப்பு வசதிகளுடன், மூன்று எச்.டி.எம்.ஐ., போர்ட், இரண்டு யு.எஸ்.பி., போர்ட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
விலை: 84,999 ரூபாய்.