'கூகுள் பிக்ஸல்' ஸ்மார்ட்வாட்ச், அக்டோபர் 6ம் தேதியன்று அறிமுகம் ஆக உள்ள நிலையில், அதன் விலை உள்ளிட்ட விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
கூகுள் பிக்ஸல் வாட்ச் 'வைபை ஒன்லி' மற்றும் 'செல்லுலார்' என, இரு மாடல்களில் அறிமுகம் ஆகிறது.வைபை ஒன்லி மாடலின் விலை, அமெரிக்காவில், கிட்டத்தட்ட 28 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும்; செல்லுலார் மாடல் வாட்ச் விலை 32 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் செய்திகள் வருகின்றன.
மேலும், இந்த ஸ்மார்ட் வாட்சுகளை, நவம்பர் 4ம் தேதி முதல் வாங்க முடியும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.