அமெரிக்காவைச் சேர்ந்த டிவி தயாரிப்பு நிறுவனமான வி.யு., இந்தியாவில், 'வி.யு., குளோ எல்.இ.டி., அல்ட்ரா எச்.டி., டிவி' வரிசையை அறிமுகம் செய்துள்ளது.
மொத்தம் மூன்று அளவுகளில், அதாவது 50, 55, 65 அங்குல அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குளோ எல்.இ.டி., டிஸ்ப்ளே பேனல் என்பது, எல்.இ.டி., பேனலின் மேம்பட்ட அம்சம் என்கிறது வி.யு., நிறுவனம்.இந்த மூன்று வகை டிவிகளுமே, அல்ட்ரா எச்.டி., எல்.இ.டி., திரை கொண்டவை. இவற்றில் 104 வாட் அவுட்புட் கொண்ட சப்வூபர் உடன் சேர்ந்த ஆடியோ சிஸ்டமும் உள்ளது.
ஆண்ட்ராய்டு டிவி சாப்ட்வேரில் இந்த டிவிகள் இயங்குகின்றன. 2 ஜி.பி., ரேம், 16 ஜி.பி., ஸ்டோரேஜ் வசதி ஆகியவையும் உள்ளன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு அட்வான்ஸ்டு கிரிக்கெட் மோடு வசதியும் உள்ளது. 'டால்பி விஷன்' தொழில்நுட்பமும் உள்ளது.
விலை:
50 அங்குலம் : 35,999 ரூபாய்
55 அங்குலம் : 40,999 ரூபாய்
65 அங்குலம் : 60,999 ரூபாய்