'சோனி இந்தியா' நிறுவனம், 'நாய்ஸ் கேன்சலிங்' வசதி கொண்ட புதிய 'டபுள்யு.எச்.,1000 எக்ஸ்.எம்.,5' எனும் ஹெட்போனை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இசை உள்ளிட்டவற்றை எந்தவித இடையூறும் இன்றி கேட்பதற்கான புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஹெட்போன் வந்துள்ளது.
நாய்ஸ் கேன்சலிங் வசதி பல ஹெட்போன்களில் இருந்தாலும், 'இது வேற மாதிரி' என்கிறது, சோனி நிறுவனம்.இந்த ஹெட்போன், 30 மணி நேரம் தாங்கும் பேட்டரி திறனுடன் வந்துள்ளது. மூன்று நிமிடம் சார்ஜ் செய்தால், மூன்று மணி நேரம் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
கறுப்பு மற்றும் வெள்ளி என இரு வண்ணங்களில் வந்துள்ளது.அக்டோபர் 8ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை: 34, 990 ரூபாய்.