'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், 11 இன் 1 'டாக்கிங் ஸ்டேஷன்' சாதனம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எம்போர்ட் 11 சி யு.எஸ்.பி., டாக்' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, இந்த 'யு.எஸ்.பி., ஹப்'.
இந்த ஹப்பில், லேப்டாப், மேக்புக்ஸ், அல்ட்ராபுக்ஸ், டேப்லெட்ஸ், ஸ்மார்ட்போன் என பலவற்றை பயன்படுத்த முடியும்.மிகவும் கையடக்கமாக, எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில், இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வழுக்காத வகையில், 'மேட் பினிஷ்' உடன், அலுமினிய உலோகத்தில் மேற்பகுதி தயாரிக்கப்பட்டு உள்ளது.இதில், நான்கு யு.எஸ்.பி., டைப் ஏ போர்ட்டுகள், டைப் சி போர்ட்டுகள், வி.ஜி.ஏ., போர்ட், எச்.டி.எம்.ஐ., 4கே போர்ட், ஈத்தர்நெட் போர்ட், 3.5 மி.மீ., ஜேக், இரண்டு மெமரி கார்டு ஸ்லாட் போன்றவை இடம்பெற்றுள்ளன.
விலை: 3,399 ரூபாய்.