'ஆப்பிள்' நிறுவனத்தின், 'மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்' வாயிலாக பயனர்கள், சாதாரண கண்களால் பார்க்க முடியாத பலவற்றை பார்க்கலாம் என்ற செய்தி கசிந்துஉள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டுக்கான காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள் வெளியே கசிந்துள்ளன.
இதன்படி, இந்த ஹெட்செட்டை பயன்படுத்தி, சமையல் வாயு கசிவை காணலாம். வைபை சிக்னலை காணலாம்.இசைக் கலைஞர்கள் சப்த அலையை பார்த்து, அவர்களது இசைக் கருவிகளை 'டியூன்' செய்து கொள்ளலாம்.
வெப்பக் கதிர்களைக் காண்பதன் வாயிலாக, தீப்பிடிக்க வாய்ப்பிருப்பதையும் முன்கூட்டியே அறியலாம் என்கிறார்கள்.